dinamalar telegram
Advertisement

குப்பையில் பழங்கால மணியார்டர் பைகள் : கண்டெடுத்து பாதுகாத்த தன்னார்வ அமைப்பு

Share
Tamil News
குன்னுார்:நீலகிரியில், 1970ம் ஆண்டுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட, 'மணியார்டர் தோல் பைகள்' குப்பையில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன.நவீன யுகத்தில், 'இன்டர்நெட், மொபைல் பேங்கிங்' என, ஒரு நொடியில், பண பரிமாற்றம் செய்யும் அளவிற்கு தகவல் தொழில்நுட்பம் முன்னேற்றம் அடைந்துள்ளது.ஆனால், அன்றைய காலத்தில் பண பரிவர்த்தனை என்பது பல நாள்; மாத கணக்கில் தொடரும் நிகழ்வாக இருந்தது. இதற்காக, நம் நாட்டில், 1880ல், 'மணியார்டர்' சேவை துவங்கியது. 135 ஆண்டுகள் சிறப்பாக செயல் பெற்ற, 'மணியார்டர்' பழைய முறை, 2015ல் முடிவுக்கு வந்து, இணையதளம் மூலம், 'மணியார்டர்' சேவை துவங்கப்பட்டது.இத்தகைய சிறப்பு பெற்ற பழைய பணப்பரிவர்த்தனை முடிவுற்று, 4 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில், இதற்காக பயன்படுத்திய பைகள்; உபகரணங்கள், தற்போது குப்பை தொட்டிக்கு வந்துள்ளன.குன்னுார் ஒட்டுப்பட்டறை குப்பை குழியில், நகராட்சியுடன் இணைந்து, குப்பை வள மேலாண்மை திட்டத்தை, செயல்படுத்தி வரும் 'கிளீன் குன்னுார்' தன்னார்வ அமைப்பின் நிர்வாகி நவீன் ஜோசப், 11 மணியார்டர் தோல் பைகள் கண்டெடுத்தார்.அதில், 'குன்னுார் ரயில்வே ஸ்டேஷன், காட்டேரி, குந்தாபிரிட்ஜ், கோத்தகிரி பஜார், வெலிங்டன் பஜார், கொலக்கம்பை,' என, எழுதப்பட்டுள்ளது.கடந்த காலங்களில், இந்த பைகளில் நாணயங்களை நிரப்பி, சுருக்கு பை போன்று, கயிறுகளால் மொத்தமாக இணைத்து பூட்டு போட்டு, ஒரு தபால் நிலையத்தில் இருந்து, மற்றொரு தபால் நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இதன் சாவிகள் இரு தபால் நிலையங்களில் மட்டுமே இருக்கும்.இதனை, ஆய்வு செய்த கோவை அருங்காட்சியக காப்பாட்சியர் சிவக்குமார், 'இது, 1970ம் ஆண்டிற்கு முன்பு பயன்படுத்தியது,' என, தெரிவித்துள்ளார்.'கிளீன் குன்னுார்' அமைப்பினர் கூறுகையில், 'இதனை முழுமையாக ஆய்வு செய்து, கண்காட்சியகத்தில் வைத்து மக்கள் பார்வையிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,' என்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement