Advertisement

சாதித்த சங்கரப்பா

Share

கூலி தொழிலாளியான சங்கரப்பா தனக்கு கிடைக்க வேண்டிய கூலிக்காக கடந்த இரண்டு வருடமாக அதிகாரிகளுடன் போராடி வெற்றி பெற்றுள்ளார்
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை யூனியன் சங்கரகோட்டை வடக்கு கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் சங்கரப்பா இவருக்கு வயது 77.இவரை பார்த்துக் கொள்பவர்கள் பராமரிப்பவர்கள் என்று யாரும் கிடையாது ,தன்னையும் தன்னை நம்பி வந்த மனைவியையும் காப்பாற்ற இந்த வயதிலும் கூலி வேலைக்கு சென்று வருகிறார்.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் மகாத்மாகாந்தி ஊரக நுாறு நாள் வேலை திட்டத்தில் வேலைக்கு சென்றார்,வேலையின் முடிவில் இவருக்கு வரவேண்டிய 35 நாள் சம்பளம் வரவில்லை ஏதோ காரணம் சொல்லி அவரை அனுப்பிவிட்டனர்.
தன்னை ஏமாற்றுகின்றனர் என்பது ஏழைத் தொழிலாளியான சங்கரப்பாவிற்கு புரிந்து போயிற்று.உழைத்த வேர்வையின் பலனை இன்னோருவர் சுரண்டுவதை அவரால் பொறுத்துக் கொள்ளமுடியவில்லை போராடுவது என்று முடிவு செய்தார்.
விடாமல் அலுவலகத்திற்கு ஏறி இறங்கினார் பலன் இல்லை வயதானவர் படிக்காதவர் ஏழைத்தொழிலாளி இவரால் என்ன செய்யமுடியும் என்று இளக்காரமாக நடத்தினர்.
மெது மெதுவாக தனக்கு வரவேண்டிய கூலி தொடர்பான ஆதாரங்களை திரட்டிக்கொண்டார் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி தகவல் கேட்டார் சம்பந்தபட்ட அலுவலகத்தில் இருந்து தகவல் வரவில்லை ஆணையருக்கு மேல் முறையீடு செய்தார்.
விஷயம் கிடப்பில் போடப்பட்டது இனி பெருசு தொல்லை இல்லை என்று எண்ணிக்கொண்டு இருந்த போது ஆணையருக்கு மீண்டும் தகுந்த ஆதாரங்களுடன் கடிதம் எழுதினார்.
இதன் அடிப்படையில் ஆணையர் விசாரணை மேற்கொண்டார் சம்பந்தப்பட்ட சங்கரப்பாவையும் ,அலுவலரையும் வரச்சொல்லி விசாரித்தார் உண்மைக்கு துணிச்சல் அதிகம்தானே சங்கரப்பா தனது தரப்பு தகவல்களை அடுக்கடுக்காக எடுத்துவைத்தார் அதிகாரிகளால் முடியவில்லை.
செருப்பு கூட போடாமல் வெறுங்கால்களுடன் நடந்து நீதி கேட்டு வந்துள்ள சங்கரப்பா பக்கமே நியாயம் இருக்கிறது அவரை அலையவிட்டதற்கும் அலட்சியப்படுத்தியதற்குமான தண்டனையாக 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது அவருக்கு சேரவேண்டிய பணத்தையும் உடனே கொடுக்க வேண்டும் என்று உத்திரவிட்டார்.
சங்கரப்பாவிற்கு தனது வேலைக்கு ஏற்ற கூலி கிடைத்தது என்பதை விட நீதி வென்றதில் பெரிதும் மகிழ்ச்சி.
எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (17)

 • Bhaskaran - Chennai,இந்தியா

  Antha athigaaripayaluvalai velai neekam seiyanum

 • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

  ஆர்டர் தானே இருக்கு, பணத்தை நான் தானே சாங்க்ஷன் பண்ணனும்ன்னு அதே லஞ்ச நா-தாரி கொக்கரிப்பான். அபராதம் 25,000 ஒரு கேலிக்கூத்து. தரவேண்டிய பணத்தையே தராமல் இழுத்தடிக்கும் கும்பல். அவர்களை சஸ்பெண்ட் செய்ய திராணியில்லாத ஆட்சியர். இது தான் இந்தியா.

 • N S Sankaran - Chennai,இந்தியா

  ஆணையர் போல சில அதிகாரிகள் இருப்பதால் தான் எப்போதாவது மழை பெய்கிறது.

 • சீனி - Bangalore,இந்தியா

  திருட்டு அதிகாரிகள், அவரிடன் கைநாட்டு வாங்கிவிட்டு, கொடுக்கவேண்டிய கூலியை திருடியிருப்பர். சட்டப்படி, ஜந்தான் அக்கவுண்டில் போடச் சொல்ல வேண்டும். இந்த மாதிரி கேப்மாரி அதிகாரிகள் வேறு தொழில் செய்யலாம், மக்கள் நலப்பணி எதற்க்கு. தண்டத்தை சம்பளத்தில் இருந்து கட் பண்ணியிருக்கவேண்டும்.

 • karutthu - nainital,இந்தியா

  உங்களுக்கு முதியோர் ஓய்வு ஊதியம் கிடைக்குமே ...... அதை முதல்வர் அலுவகத்திற்கு கடிதம் எழுதி மாவட்ட கலெக்டர் குறை தீர்க்கும் நாளில் நேரிடையாக முறையிடுங்கள் .உங்களுக்குரிய ஓய்வு ஊதியம் கிடைக்கும் .முயற்சி செய்யுங்கள் .

Advertisement