பர்னஸ் ஆயில் தயாரிக்க 8.22 டன் பிளாஸ்டிக்
குன்னுார் : குன்னுார், 8.22 டன் 'பிளாஸ்டிக்' ஐதராபாத்தில் உள்ள 'பர்னஸ்' ஆயில் தயாரிக்கும் தனியார் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டது.
நீலகிரியை, 'பிளாஸ்டிக்' இல்லாத மாவட்டமாக திகழும் வகையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்நிலையில், குன்னுார் நகராட்சியின், 30 வார்டுகளில் இருந்து, குப்பை குழிக்கு, வரும் பிளாஸ்டிக் உட்பட குப்பையை, நகராட்சியின் ஒத்துழைப்புடன் 'கிளீன் குன்னூர்' அமைப்பு சார்பில், தனித்தனியாக பிரிக்கப்பட்டு வருகிறது.மேலும், பிளாஸ்டிக் மறுசுழற்சிக்கு, தயார்படுத்த 'பேலிங்' இயந்திரம் பொருத்தப்பட்டு, பிளாஸ்டிக் 'பேக்கிங்' செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த, 2 மதங்களின் சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக்கில், 8,220 கிலோ, லாரி மூலம் ஐதராபாத்தில் உள்ள 'பைரோ கிரீன் எனர்ஜி லிமிடெட்' நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டது. அமைப்பு நிர்வாகிகள் கூறுகையில்,'இந்த பிளாஸ்டிக் மூலம் தனியார் நிறுவனத்தில், பர்னஸ் ஆயில் தயாரிக்க பயன்படுவதுடன், தேவைப்பட்டால், காஸ், கார்பன் ஆகியவையும் தயாரிக்கப்படுகிறது. மற்ற பேப்பர் உள்ளிட்ட மக்கும் பொருட்கள் இங்குள்ளவர்களுக்கு குறைந்த விலைக்கு வழங்கப்படுகிறது.
அதில் வரும் தொகை, மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில், பணியாளர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட உள்ளது,' என்றனர்.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!