dinamalar telegram
Advertisement

நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம்

Share
Tamil News
குன்னுார்: குன்னுார் நகராட்சி குப்பை குழியில் சேகரமான பேப்பர், கண்ணாடி பாட்டில் கழிவுகள்,13 டன் அளவில் மறுசுழற்சிகாக அனுப்பப்பட்டன.குன்னுார் நகராட்சிக்கு உட்பட்ட, 30 வார்டுகளில் சேகரமாகும் குப்பையை ஒட்டுப்பட்டறை பகுதியில் உள்ள குப்பைக் குழியில், கொட்டப்படுகின்றன. இங்கு கடந்த மாதம், 'குப்பைகூள மேலாண்மை பூங்கா' உருவாக்கப்பட்டு, புற்கள் பதித்து, செடிகள் நடவு செய்யப்பட்டன.நகராட்சி துப்புரவு பணியாளர்கள், 'கிளீன் குன்னுார்' அமைப்பினர் இணைந்து, பிளாஸ்டிக், கண்ணாடி பாட்டில்கள், ரப்பர், துணி, எலக்ட்ரானிக் கழிவுகள் தனித்தனியாக பிரித்து வருகின்றனர்.பிளாஸ்டிக் மறுசுழற்சிக்கு, 'பேலிங்' இயந்திரம் பொருத்தப்பட்டு, பிளாஸ்டிக் பொருட்கள் அழுத்தம் கொடுத்து, 9 டன் கழிவுகள் தயார்படுத்தப்பட்டது. இதனை 'பர்னஸ் ஆயில்' தயாரிக்க ஐதராபாத் அனுப்பப்பட உள்ளது.மேலும், அட்டை, பேப்பர் போன்றவை, 11 டன், கண்ணாடி பாட்டில்கள், 2 டன் சேகரமாகியது. பேப்பர், அட்டைகள் நகராட்சி மூலம், கோவை காரமடை, கண்ணாடி பாட்டில்கள் கவுண்டம் பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு மறு சுழற்சிக்காக நேற்று அனுப்பப்பட்டது.கிளீன் குன்னுார் நிர்வாகிகள் கூறுகையில், 'குப்பை குழியில் சேகரமாகி வீணாக குவிந்து பயனில்லாமல் கிடப்பதற்கு தீர்வு காணப்பட்டுள்ளது. விரைவில் பிளாஸ்டிக் மறு சுழற்சிக்கு அனுப்பப்பட உள்ளது,' என்றனர்.கமிஷனர் பாலு கூறுகையில், ''இதில் இருந்து வரும் நிதி துப்புரவு தொழிலாளர்களின் நலனுக்கு ஏற்பாடு செய்யப்படும்,'' என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement