Advertisement

மாமாவுக்கு ஓட்டுப்போடுங்க: பிரான்ஸ் பெண் லகலக பிரசாரம்

இந்த செய்தியை கேட்க

Your browser doesn’t support HTML5 audio

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் உள்ளாட்சி தேர்தல் மனுதாக்கலின் போது 'மாமாவுக்கு ஓட்டுப்போடுங்க' என பிரான்ஸ் பெண் ஒருவர் பிரசாரம் செய்து கலகலப்பை ஏற்படுத்தினார்.

திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம் மேலராங்கியம் ஊராட்சி தலைவர் பதவிக்கு மருதுபாண்டி போட்டியிடுகிறார். இவரது உறவினர் முத்துசெல்வம் ஊட்டியில் சுற்றுலா வழிகாட்டியாக உள்ளார். பிரான்சை சேர்ந்த ஜுஇ 19, என்ற பெண் ஊட்டி வந்துள்ளார். அவருக்கு ஊர் சுற்றிக்காட்டிய முத்துசெல்வம் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் குறித்து அவரிடம் கூறி உள்ளார். 'தேர்தல் திருவிழாவை' காண ஆசைப்பட்ட ஜுஇயை தனது சொந்த ஊரான மேலராங்கியம் அழைத்து வந்தார். அவரது உறவினர் மருதுபாண்டி நேற்று(டிச.,14) திருப்புவனத்தில் மனு தாக்கல் செய்ய ஊர்வலமாக சென்றார். அதில் பங்கேற்ற ஜுஇ, 'மாமாவுக்கு ஓட்டுப்போடுங்க' என தமிழில் கூறி பிரசாரம் செய்தார்.
ஜுஇ கூறியதாவது: பிரான்ஸ் டாகுலஸ் நகரைச் சேர்ந்த நான் பள்ளி படிப்பு முடித்துள்ளேன். இங்கு கடவுள் பக்தி பிரமிக்க வைக்கிறது. திருநீறு, குங்குமம் பூசுவது மிகவும் பிடித்துள்ளது. தேர்தலுக்காக ஊர்வலம் செல்வது, திருவிழா போல நடத்துவது ஆச்சர்யமாக உள்ளது.இந்தியா வந்து ஆறு மாதங்கள் ஆகின்றன. தமிழகத்தின் ஒவ்வொரு நிகழ்ச்சியும் பிரமிப்பாக உள்ளது, என்றார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (29)

  • Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ

    பாத்தும்மா. வெள்ளக்கார பொம்பளைங்கன்னா ரொம்ப சாக்கிரதையா இருங்க.

  • vasumathi - Sindhathari Pettai ,இந்தியா

    ரொம்ப நல்லது, கோவிலுக்கு போங்க, GAP இயர் முடிசதும் ஊருக்கு போய் யூனில சேர்ந்து மேல படிக்கிற வழிய பாருங்க. எந்த ஆசிரமம் பக்கமும் இப்ப வேண்டாம்.

  • jagan - Chennai,இந்தியா

    பாத்தும்மா. இது டுமீளர் நாடு. சாயங்காலம் 6 மணிக்கு மேல எங்கேயும் போகாதீர்கள்

  • சிங் -

    ஜாக்கிரதை டாஸ்மாக் டுமீளன் உன்னிடம் வேலை காட்டுவான்

    • மணி - புதுகை

      சிங், நீங்க அதிகமா இருக்க பஞ்சாப்பு அரியானா உத்திர பிரதேசத்தில காட்டுற வேலையைவிடவா?

  • dandy - vienna,ஆஸ்திரியா

    இனி என்ன தேர்தலில் நிற்கும் சாராய வியாபாரிகள் .. எல்லாம் ஆளுக்கொரு வெளிநாட்டு பெண்ணை இழுத்து கொண்டு போவார்கள் ..வாக்கு கேட்க மன்னிக்கவும் ஒட்டு கேட்க ....அடி ஆத்தி வெள்ளை புள்ள எம்புட்டு அழகு என்று வாய் பிளப்பார்கள் குடி மாக்கள்

    • மணி - புதுகை,இந்தியா

      உன்னோட வெள்ளைய விட வெள்ளைக்காரிக்கு வெள்ளை அதிகம், அப்போ வெள்ளைகாரிய பொறுத்தவரை நீயும் பிளாக் தான், அதுனால ரொம்ப பேசாத.

Advertisement