Advertisement

விதை விற்பனை: அதிகாரி ஆய்வு

உடுமலை:உடுமலை பகுதிகளிலுள்ள விதை விற்பனை மற்றும் உற்பத்தி நிலையங்களில், விதைச்சான்று துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர்.உடுமலை பகுதிகளில், 142 விதை விற்பனை நிலையங்களும், 5 விதை உற்பத்தி நிலையங்களும் உள்ளன. இம்மையங்களில், விதை ஆய்வு இணை இயக்குனர் மோகன சுந்தரம், விதைச்சான்று இணை இயக்குனர் ராஜேந்திரன், துணை இயக்குனர் வெங்கடாச்சலம் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.துங்காவியிலுள்ள, நெல் விதை உற்பத்தி நிலையம், உடுமலை பகுதியிலுள்ள, மக்காச்சோளம், உளுந்து மற்றும் காய்கறிகளின் விதை உற்பத்தி நிலையங்கள் மற்றும் வயல் வெளிகளையும் ஆய்வு செய்தனர்.விதை விற்பனை நிலையங்களில், விதை கொள்முதல் பட்டியல், இருப்பு பதிவேடு, விற்பனை பட்டியல் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர். விற்பனையாளர்கள் விதைகள் கொள்முதல் செய்யும் போது, விதை ரகத்திற்கான பதிவு எண் மற்றும் சான்று பெற்ற விதைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.விதைகளின் அனைத்து குவியல் எண்ணுக்கும், முளைப்பு திறன் அறிக்கை பெற்று, அதன் தரத்தினை உறுதி செய்ய வேண்டும். விதைச்சட்டத்திற்கு உட்பட்டே, விதைகளை கொள்முதல் செய்து விற்பனை செய்ய வேண்டும். தவறினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement