Advertisement

வன விலங்குகள் கணக்கெடுப்பு

உடுமலை:ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை, அமராவதி வனச்சரங்களில், குளிர்கால வன விலங்குகள் கணக்கெடுப்பு பணி, நேற்று பயிற்சியுடன் துவங்கியது.ஆனைமலை புலிகள் காப்பகம், அரிய உயிர்ச் சூழல் மண்டலமாக உள்ளது. கோடை காலம், குளிர் காலம் என ஆண்டுக்கு இரு முறை, வன விலங்குகள் கணக்கெடுக்கும் பணி நடக்கிறது.உடுமலை, அமராவதி வனச்சரகங்கள் மற்றும் வெளி மண்டல பகுதிகளான, பாப்பம்பட்டி, வந்தரவு வனச்சரகங்களில், நேற்று, குளிர்கால வன விலங்குகள் கணக்கெடுப்பு பணி துவங்கியது.வனச்சரகங்கள், 35 சுற்றுக்களாக பிரிக்கப்பட்டு, 54 நேர் கோட்டு பாதைகளில், வனத்துறை பணியாளர்கள், தன்னார்வலர்கள் என, 200க்கும் மேற்பட்டோர் கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.கணக்கெடுப்பு குறித்த பயிற்சி நேற்று, சின்னாறில் நடந்தது, மாவட்ட வன அலுவலர் திலீப், உதவி வன அலுவலர் கணேஷ்ராம் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.முதல் மூன்று நாட்கள், சுற்றுக்களிலுள்ள பகுதியில் காணப்படும், மாமிச உண்ணிகள் மற்றும் மிகப்பெரிய தாவர உண்ணிகளின் நேரில் பார்த்தும், தடயங்கள் மூலமும் கணக்கெடுக்கப்படுகிறது.அடுத்த மூன்று நாட்கள், நேர் கோட்டு பாதையில் நடந்து சென்று, நேரடியாக காணப்படும் இரை விலங்குகளையும், அதே பாதையில் திரும்பி வரும் போது, ஒவ்வொரு, 400 மீட்டரில், அப்பகுதியிலுள்ள தாவர வகைகளையும் கணக்கெடுக்கப்பட உள்ளது.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement