Advertisement

சாவர்க்கர் கருத்து: ராகுல் மீது உத்தவ் அதிருப்தி

இந்த செய்தியை கேட்க

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: சாவர்க்கர் குறித்த கருத்து தெரிவித்த ராகுல் மீது சிவசேனாவின் உத்தவ் தாக்கரே அதிருப்தி அடைந்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் முன்னாள் காங்., தலைவர் ராகுல் பார்லியில் கூறிய கருத்து ஒன்று பெரும் புயலை கிளப்பியது.இதற்கு பா.ஜ., எம்.பிக்கள் போர்க்கொடி எழுப்பினர். ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறினர்.

தொடர்ந்து தலைநகர் புதுடில்லியலில் நடைபெற்ற காங்.,கட்சி பேரணியில் தான் கூறிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க போவதில்லை எனவும் , நான் ஒன்றும் ராகுல் சாவர்க்கர் இல்லை. ராகுல் என கூறி இருந்தார்.

சாவர்க்கர் குறித்து ராகுல் கூறிய கருத்துக்கு ஆட்சேபம் தெரிவித்த சிவசேனா கட்சியின் உத்தவ் தாக்கரே மகாராஷ்டிராவில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கூட்டணியில் பிரச்னைகளை தவிர்க்க காங்., தேவையற்ற அறிக்கைகளை வெளியிடக்கூடாது என கூறி உள்ளார்.

மேலும் சிவசேனாவின் சஞ்சய் ராவத் டுவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது: சாவர்க்கர் என்ற பெயரில், நாட்டிற்கும் சுய மரியாதைக்கும் ஒரு பெருமை இருக்கிறது. நேரு மற்றும் காந்தியைப் போலவே, சாவர்க்கரும் நாட்டுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். அவரை மதிக்க வேண்டிய அவசியம் உள்ளது என பதிவிட்டுள்ளார்.

மேலும் சாவர்க்கரின் பேரன் உத்தவ் தாக்கரேவுக்கு விடுத்துள்ள கோரிக்கையில் தனது தாத்தாவை அவமதிதத்ததற்காக ராகுலை உத்தவ் பகிரங்கமாக கண்டிக்க வேண்டும் என கூறி உள்ளார்.

முன்னதாக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் டுவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது: சாவர்க்கர் தனது முழு வாழ்க்கையையும் எங்கள் மராட்டிய பூமிக்காக தியாகம் செய்துள்ளார். ராகுலின் சாவர்க்கர் குறித்த கருத்து அனைத்து சிறந்த தேசபக்தர்களுக்கும் சுதந்திர போராட்ட வீரர்களுக்கும் அவமானம். தனது பொறுப்பற்ற அறிக்கைக்கு நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (38)

  • bal - chennai,இந்தியா

    இவன் கொங்கிரஸ் அடிமையாயிட்டான்...இனி என்ன பேச்சு...

  • Sathya Dhara - chennai,இந்தியா

    பதவி சுகம் ஒன்றையே மனதில் கொண்டு......கான் கிராஸ் எனும் செ ப் டி க் தொட்டியில் இறங்கியுள்ள உத்தவ் தாக்கரேக்கு ....இதுதான் ஆரம்பம். இனி சிவ சேனா தொண்டர்கள் அனைவரும் பாஜகவில்தான் புகலிடம் தேடுவார்கள்.

  • ashak - jubail,சவுதி அரேபியா

    ஆட்சிக்காக காங்கிரசின் காலை கழுவிய உத்தவ்

  • blocked user - blocked,மயோட்

    மோடியை எப்படிப்பேசினாலும் பொறுத்துக்கொள்வார். வின்சியை விமர்சித்தால் பியூஸ் பிடுங்கப்படும் என்பதை தாக்கரே புரியாதது துரதிஷ்டம்.

  • Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

    if utav is a gentle man he should come out from this alliance and go with BJP. But again he wants chief ministership...all political thugs

Advertisement