Advertisement

மோடி வாரிசு யார்? பார்லி.,யில் வெளிப்படை

இந்த செய்தியை கேட்க

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: குடியுரிமை சட்ட திருத்த மசோதா, லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டு
விவாதிக்கப்பட்ட போது, பிரதமர் மோடி சபையில் இல்லை; ஜார்க்கண்ட் மாநில, சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் இருந்தார். ராஜ்யசபாவில், இந்த மசோதா விவாதிக்கப்பட்ட போது,
பிரதமர் மோடி பேசுவார் என, அனைவரும் எதிர்பார்த்தனர்.


அப்போது அவர், தேர்தல் பிரசாரத்தில் இருந்து, டில்லி திரும்பி விட்டாலும் சபைக்கு
வரவில்லை. லோக்சபா, ராஜ்ய சபா என இரண்டிலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தான், எதிர்க்கட்சி வாதங்களை எதிர் கொண்டு பதில் அளித்தார்.'குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு முழு காரணம் அமித் ஷா தான். இரவு, பகலாக
பாடுபட்டு, ராஜ்யசபாவில் பெரும்பான்மை இல்லாத போதும், கூட்டணி கட்சிகளுடன் பேசி, மசோதாவை நிறைவேற்ற வைத்துள்ளார்.


இது, அமித் ஷாவின் கடும் உழைப்பு; எங்கே தான் சபையில் பேசினால், அது, அமித் ஷாவின் உழைப்பை குறைத்துவிடும் என்பதால் தான், மோடி பேசவில்லை' என்கின்றனர், பா.ஜ.,
தலைவர்கள்.'காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கியதிலும், அமித் ஷா தான் அனைத்து வேலைகளையும் பார்த்தார். மோடி இரண்டாம் முறையாக ஆட்சிக்கு வந்த ஆறு மாதங்களில் காஷ்மீர் விவகாரம், குடியுரிமை சட்ட விவகாரம் என, பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த விஷயங்களை அமித் ஷா நிறைவேற்றிவிட்டார்' என்கின்றனர் பா.ஜ.,வினர்.

'அமித் ஷா தைரியமானவர்; எந்த ஒரு எதிர்ப்பையும் சமாளித்து, எதிர்க்கட்சிகளை ஓட
விடுவார். பிரதமர் மோடி போல, அவருக்கு மக்களைக் கவரும் சக்தி இல்லையென்றாலும், வேலை செய்வதில் அவர் கில்லாடி. அமித் ஷா தான் மோடியின் வாரிசு என்பதை, குடியுரிமை சட்டம் நிரூபித்துவிட்டது' என்கின்றனர் சீனியர் பா.ஜ., தலைவர்கள்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (54)

  • JOY - Chennai,இந்தியா

    குஜராத் சரித்திரம் தெரிந்தவர்களுக்கு தெரியும் மோடி சும்மா showdoll அமைத்து தான் எல்லாம் னு ,கண்டிப்பா முடிவு உண்டு குமாரு

  • ganapati sb - coimbatore,இந்தியா

    அமித்ஸாவுக்கு குஜராத்தில் ஆட்சியிலும் உபியில் கட்சியிலும் பொறுப்புகள் கொடுத்து சோதித்து பார்த்து வளர்த்தவர் மோடி கடாரம் கொண்டான் ராஜராஜ சோழனுக்கு ஏற்ற கங்கை கொண்டான் ராஜேந்திர சோழன் அமித்ஸாவின் அயராத உழைப்பு மோடியே போற்றும் படி உள்ளது தொடரட்டும் வாஜ்பாய் அத்வனி மிஞ்சும் இந்த இணை

  • Chennai B.S - Chennai,இந்தியா

    அதிவேகம் ஆபத்து என்பது கூட தெரியாமல் ஆடும் ஆட்டம் , கடவுள் இருக்கான் குமாரு

    • Sathya Dhara - chennai,இந்தியா

      1947 முதல் எவ்வளவு வேகத்தோடு ஆட்டம் போட்டார்கள் ...இந்த கான் கிராஸ் கும்பல்... கடவுள் இப்போதுதான் வந்து இருக்கிறார் குமாரு....

  • oce - kadappa,இந்தியா

    அடேய் உனக்கு எதுவும் தெரியாது.

  • S.Baliah Seer - Chennai,இந்தியா

    இதிலிருந்து தாங்கள் சொல்ல வருவது....அமித்ஷாதான் அடுத்த பிரதமர் என்றா?

Advertisement