Advertisement

ராமநாதபுரம் மாவட்டத்தில் மழை மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Share
ராமநாதபுரம்:ராமநாதபுரம், ராமேஸ்வரம் உட்பட மாவட்டத்தின் பல இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ரோடுகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. பல இடங்களில் வீடுகளை சூழ்ந்துள்ள வெள்ள நீர் வடியாத நிலையில், தற்போது மீண்டும் மழை பெய்து வருவதால்
மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் வட கிழக்கு பருவ மழை தொடர்ந்து பெய்கிறது. இதன் காரணமாக நீர்
நிலைகளான ஊரணிகள், குளம், கண்மாய்கள் நிரம்பி வருகிறது. நீர் நிலைகளில் நிறைந்த மழை நீர் வரத்து கால்வாய்கள் மூலம் வெளியேறுகிறது.இதனால் ரோடுகள், குடியிருப்பு பகுதிகளில் மழை நீர்தேங்கியுள்ளது. ஏற்கனவே பெய்த மழையால் வடிகால்கள் இல்லாமல்தேங்கிய நீரில் தற்போதைய மழை நீரும் சேர்ந்து தேங்கி வருகிறது.

இதனால் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.தேங்கிய மழை நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி பலர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணிகள் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பல பள்ளிகள், அலுவலகங்களை சூழ்ந்துள்ள மழை நீரை அப்புறப்படுத்துவதில் அதிகாரிகள் ஆர்வம் காட்டவில்லை.

பல பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் பள்ளமாக உள்ள பகுதிகளில்தேங்கிய மழை நீரை போர்க்கால அடிப்படையில் அகற்றி நிரந்தர தீர்வு காண வேண்டும், என மக்கள் விரும்புகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement