Advertisement

நெற்பயிரை காப்பாற்ற போராடும் விவசாயிகள்

Share
கமுதி:கமுதி அருகே மகசூல் நிலையை அடைந்துள்ள நெற்பயிரை காப்பாற்ற விவசாயிகள் ரோட்டோரம் தேங்கியுள்ள மழைநீரை மோட்டார் பயன்படுத்தி பாய்ச்சி வருகின்றனர்.

கமுதி அருகே பெருநாழி பகுதியில் கனமழை பெய்தபோதும், சமீபகாலமாக மழை இல்லாதநிலையில், ஏற்கனவே பெய்த மழையை நம்பி நெல் விவசாயத்திற்கு களை எடுப்பு, உரம்இடுதலில் ஈடுபட்டனர். இருந்தபோதிலும் தற்போது கதிர்கள் பொதி நிலையை அடைந்துள்ளதால்இன்னும் சில நாட்களில் மகசூல் நிலையை எட்டும்.

ஆனால் நெல் விவசாயம் செய்த நிலங்களில் போதிய தண்ணீர் இல்லாததால் பெருநாழி விவசாயிகள், ரோட்டோரங்கள், வரத்து கால்வாய்களில் தேங்கிய மழைநீரை மோட்டார் பயன் படுத்திபாய்ச்சி வருகின்றனர். ஒரு மணி நேரத்திற்கு 200 ரூபாய் வரை செலவு ஆனாலும், மகசூல் கிடைக்கும் என்ற உறுதி ஏற்பட்டுள்ளதால் காய்ந்து வரும் நெற்பயிர்களை காக்க, தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement