Advertisement

கடன் தொல்லை ஊழியர் தற்கொலை

திருமுல்லைவாயல்:கடன் தொகையை கேட்டு, வங்கி ஊழியர்கள் மிரட்டியதால், தனியார் நிறுவன ஊழியர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருமுல்லைவாயல், பத்மாவதி நகரைச் சேர்ந்தவர் கமலகண்ணன், 45; தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி தேவராணி, 40, மகன்கள் குமரன், 18, வசந்த், 16. இவரது வீட்டிற்கு, இரண்டு நாட்களுக்கு முன் சென்ற தனியார் வங்கி ஊழியர்கள், 'கடன் தொகையை, 14ம் தேதிக்குள், தயார் செய்து வைத்து விடு' எனக் கூறி மிரட்டி சென்றனர்.இதனால் விரக்தியடைந்த அவர், நேற்று முன்தினம் இரவு, மனைவி மகன்கள் துாங்கிய பின், ஸ்டோர் ரூமில், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருமுல்லைவாயல் போலீசார் விசாரிக்கின்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • சமத்துவம் - Chennai,இந்தியா

    தனியார் வங்கிகளில் கடன் வாங்குவது நம் தலையையே அடகு வைப்பதற்கு சமம். கட்ட முடியவில்லை என்றால் சாவதை தவிர வேறு வழியில்லை என்னும் அளவுக்கு கொண்டுபோய் விடுவார்கள். என்ன தான் கடுமையான சட்டங்கள் இருந்தாலும் இந்த கடன் வசூலிக்கும் நிறுவனங்கள் அதில் எந்த வரைமுறைகளையும் பின்பற்றுவது இல்லை.

Advertisement