Advertisement

நகைக்கடை மீது போலீசில் புகார்

சென்னை:நகை சேமிப்பு திட்டத்தில், மோசடி செய்த தனியார் நகைக்கடை மீது நடவடிக்கை கோரி, பாதிக்கப்பட்ட மக்கள், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
சென்னையில், மயிலாப்பூர், புரசைவாக்கம், அண்ணா நகர் போன்ற இடங்களில் செயல்பட்டு வரும், தனியார் ஜுவல்லரி நகைக்கடையில், 'ஜி.எல்.பிளஸ்' என்ற திட்டத்தில், 1,999 ரூபாய் செலுத்தி, தங்க நகை சேமிப்பு திட்டத்தில் பொதுமக்கள், உறுப்பினராக சேர்ந்துள்ளனர்.பலர், பழைய தங்க நகைகளை கொடுத்து, புது தங்க நகைகளாக மாற்றும் திட்டத்திலும் இணைந்தனர். இத்திட்டத்தில், பல கோடி ரூபாய் பொதுமக்கள் செலுத்தியுள்ளனர்.இந்நிலையில், சீட்டு கட்டிய பலருக்கு, முதிர்வு தொகையாக வழங்கப்பட்ட காசோலைகள், அந்நிறுவனத்தின் வங்கி கணக்கில் பணம் இல்லாததால், பணம் செலுத்தியவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.அந்நிறுவனத்தின் நகை கடையும் மூடப்பட்டிருப்பதால், பணத்தை மீட்டு தரக்கோரி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், 10க்கும் மேற்பட்டோர், நேற்று புகார் மனு அளித்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Nanthakumar.V - chennai,இந்தியா

    Kadai pera podungappa....

Advertisement