Advertisement

காயம்!அங்கன்வாடி மேற்கூரை பெயர்ந்து விழுந்து பெண்களுக்கு.... அதிஷ்டவசமாக தப்பிய மாணவர்கள்

செங்குன்றம்:அங்கன்வாடி மைய மேற்கூரை பெயர்ந்து விழுந்த சம்பவத்தில், இரு பெண்கள் காயமடைந்தனர்.
செங்குன்றம் அடுத்த விளாங்காடுபாக்கம், மல்லிமா நகர் கிராமத்தில், அரசு அங்கன்வாடி மையம் உள்ளது. இங்கு, அந்த பகுதியைச் சேர்ந்த, 20 குழந்தைகள் படிக்கின்றனர். அந்த மையம், 2014 - 15ல், 6.50 லட்சம் ரூபாய் செலவில், அப்போதைய, அ.தி.மு.க., - எம்.பி., வேணுகோபாலின், திருவள்ளூர் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டது.
நேற்று முன்தினம், அந்த மையத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக, அப்போது குழந்தைகள் யாரும் அங்கு இல்லை. மையத்தின் சமையலர் செல்வி, 43, அவருடன் இருந்த, அந்த பகுதியை சேர்ந்த மூதாட்டி ஞானபுஷ்பம், 70, ஆகியோர் காயமடைந்தனர். செங்குன்றம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • ஆப்பு -

    6.5 லட்சம் ரூவாயில் எத்தனை கமிஷன் அடிச்சாங்களோ?

  • ருத்ரா -

    ஒப்பந்தம் தரும் நிர்பந்தம். குழந்தைகள் படித்து மகிழ வேண்டிய இடம். பார்த்து செயல்படணும்

  • Bhaskaran - Chennai,இந்தியா

    நாலு வருஷம் கூட தாக்கு பிடிக்கலை சிமெண்ட் கலந்தாங்களா அல்லது வெறும் மண் தானா

Advertisement