Advertisement

ஆதிபுரீஸ்வரரை தரிசிக்க அலைமோதிய பக்தர்கள்

திருவொற்றியூர்:தியாகராஜ சுவாமி கோவிலில், கவசமின்றி ஆதிபுரீஸ்வரரை தரிசிக்க, 1.5 லட்சம் பக்தர்கள் குவிந்தனர்.
திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. இக்கோவில் வளாகத்தில் வீற்றிருக்கும் மூலவர் ஆதிபுரீஸ்வரர், கவசத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.ஆண்டுதோறும், கார்த்திகை மாதம், பவுர்ணமியன்று கவசம் திறக்கப்பட்டு, மூன்று நாட்களுக்கு புனுகு சாம்பிராணி தைலாபிஷேக வைபவம் நடக்கும்.அதன்படி, 11ம் தேதி கவசம் திறக்கப்பட்டு, நேற்று முன்தினம் இரவு வரை, புனுகு சாம்பிராணி தைலாபிஷேக வைபவம் நடந்தது. இரவு, அர்த்தஜாம பூஜைக்கு பின், மீண்டும் கவசம் அணிவிக்கப்பட்டது.
ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும், அரிய நிகழ்வான இந்த வைபவத்தில், தெலுங்கானா கவர்னர் தமிழிசை, தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, சென்னை கலெக்டர் சீதாலட்சுமி, நீதியரசர்கள் வேலுமணி, தண்டபாணி, ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராஜேந்திரன், ஐ.பி.எஸ்., அதிகாரி சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.
மேலும், வடபழநி ஆண்டவர் கோவில் தக்கார் ஆதிமூலம், அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் திருமகள், வான்மதி, திருவொற்றியூர் நீதிமன்ற நீதிபதிகள் வரலட்சுமி, இசக்கி மகேஷ், திரைப்பட நடிகர் ராகவா லாரன்ஸ் உட்பட, மூன்று நாளில், 1.5 லட்சம் பேர், ஆதிபுரீஸ்வரரை தரிசித்துள்ளதாக, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement