Advertisement

உலகின் பெரிய கிரிக்கெட் மைதானம்! :குஜராத்தில் அடுத்த ஆண்டு திறப்பு

Share

இந்த செய்தியை கேட்க

Your browser doesn’t support HTML5 audio

ஆமதாபாத்:குஜராத்தின் சர்தார் வல்லபாய் படேல் மைதானம்,உலகின் மிகப்பெரிய
கிரிக்கெட் மைதானமாக உருவெடுத்து வருகிறது. 1லட்சத்து 10 ஆயிரம் ரசிகர்கள் அமர்ந்து போட்டியை காணலாம்.


ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் தான் உலகின் பெரிய கிரிக்கெட் மைதானமாக உள்ளது. இங்கு ஒரு லட்சத்து 24 பேர் அமரலாம். இதை முறியடிக்க 2015ல் குஜராத் கிரிக்கெட் சங்கம் முடிவு செய்தது. ஆமதாபாத் நகரின் மொடிரா பகுதியில் 1982ல் உருவாக்கப்பட்ட சர்தார் படேல் மைதானத்தை புதுப்பிக்க களமிறங்கியது.

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் எண்ணமும் இதற்கு புத்துயிர் அளித்தது. சபர்மதி நதிக்கரையோரம் உள்ள மைதானத்தை பிரமாண்டமாக மாற்ற, 2015ல் இடிக்கப்பட்டது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் திறக்கப்பட உள்ளது. உலகத்தில் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம்(1 லட்சத்து 10 ஆயிரம்) என்ற பெருமையை பெறவுள்ளது. ஆசிய 'லெவன்', உலக 'லெவன்' அணிகளுக்கு இடையிலான கண்காட்சி போட்டி நடத்தும் வாய்ப்பு உள்ளது.

இதன் சிறப்புகள்

* குஜராத்தில், உலகின் மிகப்பெரிய சர்தார் வல்லபாய் படேல் சிலையை அமைத்த லார்சன் அன்ட் டர்போ நிறுவனம் தான் மைதானத்தின் வடிவம், கட்டுமான பணிகளை ஏற்றுள்ளது.

*மொத்த பரப்பளவு 63 ஏக்கர்

* திட்ட மதிப்பு ரூ. 700 கோடி

* 3 ஆயிரம் கார், 10 ஆயிரம்இரு சக்கர வாகனம்நிறுத்தலாம்.

* ஒலிம்பிக் தரத்தில் நீச்சல் குளம், 50 அறைகள், 4 'டிரெசிங்' ரூம்.

* சூரியஒளி மின்சார தகடுகள் பொருத்தப்படும்.

* 11 ஆடுகளங்கள்.

* மழையால் ரசிகர்கள் பாதிக்கப்படாமல் இருக்க, சிறந்த மேற்கூரை

* மைதானத்தில் மழைநீரை வெளியேற்றும் வசதி சிறப்பாக இருக்கும்.போட்டி பாதிக்கப்பட்டால், வெறும் 30 நிமிடங்களில் மீண்டும் ஆட்டத்தை துவக்கலாம்.

*எவ்வித துாணும் இல்லாமல் பார்வையாளர் பகுதி அமைக்கப்பட உள்ளது. எங்கிருந்து
பார்த்தாலும் போட்டியை தெளிவாக காண முடியும்.

* இந்தியாவில் தற்போதுஉள்ள மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான ஈடன் கார்டனை
(66 ஆயிரம் பேர் அமரலாம்) முந்தும்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (5)

 • S.Baliah Seer - Chennai,இந்தியா

  புல்லட் ரயில்,உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் போன்ற எல்லாமே குஜராத்திற்கு மட்டுந்தானா?

 • பிரபாகரன் -

  புரியவே இல்ல. 1.24 லட்சம் பேர் மெல்போர்ன் ஸ்டேடியம்ல உக்காரலாம். இந்த ஸ்டேடியம்ல 1.10 அப்புறம் எப்படி உலகின் மிகப்பெரிய ஸ்டேடியம் ஆகும்????

 • தஞ்சை மன்னர் - Tanjore,இந்தியா

  இந்தியாவோ ட மொத்த வரியும் அந்த ஒரு மாநிலமே முழிங்கிவிடும் போல

 • Sri,India - India,இந்தியா

  இங்க .....உலகிலேயே அதிகமான மதுக்கடைகள் உள்ள மாநிலமாக தமிழகம் ....விவசாய நிலங்களைக் கூட விட்டு வைக்காமல் சாராய கடை திறந்து மக்களை சாக வைக்க காத்திருக்கிறார்கள். விவசாய நிலங்களில் மோட்டார் அறை தவிர இதர கட்டிடம் கட்ட தடை உள்ள நிலையில் அரசு எப்படி மதுக்கடைகளை கட்டுகிறது? யார் செத்தாலும் பாட்டிலுக்கு கமிஷன் வர வேண்டும் என்ற மனோபாவம் பல தலைமுறைக்கு சாபத்தை கொடுக்கும் .

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  இதைத்தான் நம் முன்னோர்கள், "ஊருல கல்யாணம், மாருல சந்தனம்" என்று சொல்லி வைத்தார்கள். விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்ய முடியாது. கார்பரேட்களுக்கான செலவு மட்டும் மக்களின் வரிப்பணத்தில் இருந்து.

Advertisement