Advertisement

தீவிரமாகும் டெங்கு! மாவட்டத்தில், 27 பேருக்கு பாதிப்பு

திருப்பூர்:டெங்கு காய்ச்சல் அறிகுறி பரவலாக உள்ளதால், திருப்பூர் மாவட்டத்தில் நோய்தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.திருப்பூர் அடுத்த முதலிபாளையம் ஊராட்சியைச் சேர்ந்த பலர், 'டெங்கு' காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர், காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிலர், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர்.அவர்கள், குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், தற்போது, மேலும் சிலர், காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு, ரத்த பரிசோதனை மேற்கொண்டதில், டெங்கு இருப்பது உறுதி செய்யப்பட்டது.இதனால், திருப்பூர் மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் சாந்தி, சுகாதாரத்துறை துணை இயக்குநர் ஜெகதீஷ் ஆகியோர், முதலிபாளையம் பகுதியில் 'மாஸ்கிளீனிங்' செய்ய உத்தரவிட்டுள்ளனர்.சுகாதார குழுவினர், வீடு, பொது இடங்கள், அலுவலகங்களில் தண்ணீர் தேங்கி உள்ள இடங்கள், தண்ணீத் தொட்டிகளில் ஆய்வு செய்கின்றனர்.அதேபோல், டெங்கு-2ம் பக்கம் பார்க்க

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement