Advertisement

மியாவாக்கி முறையில் மரக்கன்று நடுதல்

உடுமலை:உடுமலை வித்யாசாகர் கலை அறிவியல் கல்லுாரியில், மியாவாக்கி முறையில்மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது.கல்லுாரி சமூகப்பணி துறை, நாட்டுநலப்பணி திட்டம், மற்றும் கோவை 'லெட்ஸ் தேங்க் பவுண்டேஷன்' சார்பில், மியாவாக்கி முறையில் கல்லுாரி வளாகத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது.கல்லுாரிச்செயலாளர் பத்மாவதி முன்னிலை வகித்தார். அத்தி, தண்ணீர் காய், வேம்பு, புங்கன், சொர்க்கம், முள் சீத்தா உட்பட, 600க்கும் மேற்பட்ட நாட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன.கல்லுாரி முதல்வர் மருதுபாண்டியன் தலைமை வகித்தார். கல்லுாரி அறங்காவலர் விக்ரம், மரக்கன்று நடும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.லெட்ஸ் தேங்க்பவுண்டேஷன் ஒருங்கிணைப்பாளர் உமா மகேஸ்வரி, மாணவர்களுக்கு இயற்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தொடர்ந்து, மாணவர்கள் மரக்கன்றுகளை நட்டனர்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, சமூகப்பணி துறை தலைவர் பிளஸ்சோ, நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் நந்தகுமார் செய்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement