Advertisement

அரிசிக்கு பணம் வழங்காவிட்டால் போராட்டம்: மக்கள் நீதி மையம் அறிவிப்பு

புதுச்சேரி:இலவச அரிசிக்கு பணம் வழங்காவிட்டால் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என மக்கள் நீதி மைய மாநில தலைவர் எம்.ஏ.எஸ்.சுப்பரமணியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை:புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்., அரசு பொறுப்பேற்றது முதல் எந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. மாறாக முதல்வர் நாராயணசாமி, கவர்னர் கிரண்பேடியுடன் யாருக்கு அதிகாரம் என்று கடும் மோதலிலேயே ஈடுபட்டு வருகின்றார். இதனால் புதுச்சேரி மக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். மாநிலத்தின் வளர்ச்சி முற்றிலும் பாதிக்கப்பட்டு வருகிறது. திட்டங்கள் அனைத்தும் அறிவிப்பிலேயே உள்ளது. எதுவும் செயல்பாட்டிற்கு வரவில்லை.முதல்வர் நாராயணசாமியும், அமைச்சர் கந்தசாமியும் முதலில் 6 மாத கால இலவச அரிசிக்கான பணத்தை டிசம்பர் 10ம் தேதிக்குள் வழங்குவோம் என அறிவித்தனர். பின்னர் 5 மாத பணத்தை வழங்குவோம் என்று அறிவித்தனர். ஆனால் இன்றுவரை மக்களுக்கு பணம் கிடைக்கவில்லை.இந்நிலையில் முதல்வர் நாராயணசாமி யாருக்கு அதிகாரம் என்ற வழக்கில் டிசம்பர் 13ம் தேதி தீர்ப்பு வரும் அதன்பின்னர் சிறந்த நிர்வாகத்தை வழங்குவேன் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.எனவே முதல்வர் நாராயணசாமி நிதர்சனத்தை புரிந்து கொண்டு வழக்கை காரணம் காட்டாமல், கவர்னரை எவ்வாறு எதிர் கொண்டால் சிறந்த நிர்வாகத்தை வழங்க முடியும் என்பதை உணர்ந்து செயல்பட்டு மக்களுக்கு அறிவித்த திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்.அடுத்த வாரத்திற்குள் இலவச அரிசிக்கான பணத்தை மக்களுக்கு கிடைக்கச் செய்யாவிட்டால் குடிமைப்பொருள் வழங்கல் துறை அலுவலகத்தை அமைப்புச்சாரா தொழிலாளர்களை திரட்டி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement