Advertisement

வேலுமணிக்கு தி.மு.க., பதில்

Share
சென்னை: 'தி.மு.க. தலைவர் ஸ்டாலின் குறித்து குறை கூற அமைச்சர் வேலுமணிக்கு அருகதை இல்லை' என சென்னை மாநகராட்சி முன்னாள் மேயரும் தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை: உள்ளாட்சி அமைப்புகளில் கொள்ளையடித்து தன் சொந்த கஜானாவையும் தனக்கு பதவி கொடுத்தவர்களின் கஜானாவையும் நிரப்பி வரும் அமைச்சர் வேலுமணிக்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் குறித்து குறை கூற அருகதை இல்லை.

உள்ளாட்சி நிர்வாகத்தில் ஜீரோ; நேர்மையில் ஜீரோ; வெளிப்படையான டெண்டர் விடுவதில் ஜீரோ என பல ஜீரோக்களை வாங்கி ஊழலிலும் பணம் சுருட்டுவதிலும் ஹீரோவாக இருக்கும் வேலுமணிக்கு நாகரிகமாக அறிக்கை விட தெரியவில்லை.

தி.மு.க. மற்றும் அறப்போர் இயக்கம் கொடுத்த புகார்களில் 349 ஒப்பந்தங்கள் தொடர்பான ஊழலை விசாரிக்க அ.தி.மு.க. அரசு அனுமதி கொடுத்துள்ளது. ஆற்று மணலுக்கு பதிலாக எம்.சாண்ட் ஊழலில் இருந்து அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் நடந்த ஊழல் குறித்து விசாரித்தாலே அமைச்சர் சிறை செல்வது உறுதி. ஆதாரங்களுடன் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு முதலில் பதில் கூறட்டும்.

முதல்வரையும் ஊழல் பணத்தையும் வைத்து போலீஸ் அதிகாரிகளை மாநகராட்சி அதிகாரிகளை மிரட்டும் வேலுமணி முதலில் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும். தி.மு.க. தலைவரை ராஜினாமா செய்யும்படி கேட்க அவருக்கு தகுதியில்லை.மக்களை சந்திக்கும் தைரியம் இருந்தால் கூண்டோடு ராஜினாமா செய்து விட்டு சட்டசபை தேர்தல் களத்திற்கு வாருங்கள். ஒட்டுமொத்த அமைச்சரவையையே ஓட ஓட விரட்டி அடிக்க மக்கள் காத்திருக்கின்றனர். இவ்வாறு மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (12)

 • Appan - London,யுனைடெட் கிங்டம்

  அதிமுக அமைச்சர்கள் எல்லோரும் நாலு கால் அமைச்சர்கள்..அவர்கள் சுய கவுரமாம் இல்லாதார்கள்..இவர்கள் ஐசி எப்படி இருக்கும்..? அதற்காக திமுக நல்ல கட்சி என்று சொல்லமுடியாது..ஆனால் திமுகவில் இப்போ நல்ல பேசாளர்கள் உள்ளார்கள்..ஆனால் திமுக முகவும் அதிமுக போல் ஒழுக்கம் இல்லாதார்கள். நாலு காலீல் தமிழும் அதிமுகவை வீட்டா திமுக நல்லது தான்.. திமுக மாறினால் ஆட்சியை பிடிக்கும்..முக காலம் போல் துதி பாடினால் மக்கள் ஒட்டு போட மாட்டார்கள்..திமுக முக குடியும்பத்தின் சொத்தல்ல..

 • NATARAJAN - Coimbatore,இந்தியா

  ஊழலே கடல் என நீந்தி சொத்துக்களை குவித்திருக்கும் திமுக மற்ற அரசியல் கட்சிகளை பற்றி குறை சொல்ல எந்த ஒரு அருகதையும் இல்லை என மக்கள் உணர்ந்திருக்கிறார்கள்

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  உள்ளாட்சிகளில் இரண்டு திராவிஷக் கட்சிகளுக்குமே ஒன்றுக்கொன்று கூட்டுக்கொள்ளையும் கட்டிங் பிரித்தாலும் உண்டு . கூடியபிறகு குற்றம் காணும் கொள்கையைத் தள்ளுங்கள்

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  இந்த மாசு மீதே ஊழல் கேஸ் நடக்குதாமே இவர்கூடஊழலைப் பத்தி பேசி அசிங்கப்படுறாரு (மாசு? பெயர்ப் பொருத்தம் சூப்பர்)

 • Palanisamy Sekar - Jurong-West,சிங்கப்பூர்

  யாரு இது..ஓஹோ ..இப்போதான் கோர்ட்டில் பார்த்த முகமா இருக்கே..ஆமா அதே பளபளப்பு அதே மினுமினுப்பு..என்ன அன்னிக்கு இந்த சந்தோஷ முகம் மிஸ்ஸிங். ..எதுக்கப்பா கோர்ட்க்கு குடும்பத்தோட வந்திருந்த..அத கொஞ்சமா இப்போ இங்கே சொல்லியிருக்கலாமே..என்ன அரசாங்க நிலத்தை கொள்ளையடித்த சமாச்சாரமா..அப்போ சொல்லு..நீங்க யோக்கியமா..இவருக்கு பதில் சொல்ல உங்களுக்கு என்ன தகுதி இருக்குங்குறேன்..ஊரை கொள்ளையடிச்சுட்டு கோர்ட்டில் வாய்பொத்தி நின்னுட்டு இப்போ இங்கே வாயப்பாரேன்..அடுத்து ஜெயிலுக்குள்ளே இருந்து குடும்பத்தோட அரசாங்க பணத்தில் சோத்த தின்னுட்டு தெனாவட்டா அடுத்த அறிக்கிய எதிர்பார்க்கலாமா?

Advertisement