Advertisement

உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும் இந்திய கம்யூ., வலியுறுத்தல்

Share
புதுச்சேரி:மாநிலத்தில் தேவைக்கு அதிகமாக உள்ள ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளை திருப்பி அனுப்ப வேண்டும் என இந்திய கம்யூ., கோரிக்கை விடுத்துள்ளது.
இந்திய கம்யூ., மாநிலக் குழு அமைப்பு நிலை நெறிப்படுத்தும் மாநாடு உழந்தைகீரப்பாளையம் எம்.ஜி.ஆர். மஹாலில் நடந்தது. முன்னாள் அமைச்சர் விசுவநாதன் கொடியேற்றினார். ஏகாம்பரம் வரவேற்றார். தேசிய நிர்வாக குழு உறுப்பினர் அஜிஸ்பாஷா மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார்.தமிழ் மாநில துணை செயலர் வீரபாண்டியன், புதுச்சேரி மாநில செயலர் சலீம், தேசிய குழு உறுப்பினர் ராமமூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ., நாரா.கலைநாதன், மாநில துணை செயலர்கள் அபிஷேகம், கீதநாதன், கட்டுப்பாட்டுக்குழு தலைவர் தனராமன், மாநில நிர்வாக குழு உறுப்பினர்கள் தினேஷ் பொன்னையா, சேது செல்வம், முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் மாநில தேர்தல் ஆணையர் நியமிக்கப்பட்டு 6 மாதங்கள் கடந்த நிலையிலும் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான பூர்வாங்க வேலைகளை கூட தேர்தல் ஆணையம் தொடங்காமல் உள்ளது.
உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் ஊரக வளர்ச்சி, நகர்ப்புற வளர்ச்சி துறைகள் மூலம் கிடைக்க வேண்டிய நிதி கிடைக்காமல் உள்ளது. எனவே மக்களுக்கு நேரடியான அதிகாரமும், ஜனநாயகமும் கிடைத்திட உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்திட வேண்டும்.மாநிலத்தில், தேவைக்கு அதிகமாக உள்ள ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளை திருப்பி அனுப்ப வேண்டும். உள்ளூர் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்.
அரசு துறைகளில் காலியாக உள்ள 8500 பணியிடங்களை நிரப்ப வேண்டும். அரசு மருத்துவமனைகளில் தரமான சுகாதார வசதிகள் கிடைத்திடவும், தமிழகத்தைப்போல் மருத்துவ காப்பீடு திட்டத்தை நடைமுறைப்படுத்தவும், ஆரம்ப சுகாதார நிலையங்களின் தரத்தை உயர்த்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், போதை பொருள் விற்பனையை தடுக்கவும் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement