dinamalar telegram
Advertisement

விடுமுறை நாளில் மத்திய பட்ஜெட் தாக்கல்

Share
Tamil News
புதுடில்லி : மத்திய நிதியமைச்சகம்,வரும் நிதியாண்டு பட்ஜெட்டை, விடுமுறை நாளன்று தாக்கல் செய்ய உள்ளது.

கடந்த, 2016 வரை, மத்திய பட்ஜெட், பிப்ரவரி இறுதி நாளன்று தாக்கல் செய்யப்பட்டு வந்தது. இதன் காரணமாக, புதிய வரி, திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பட்ஜெட் நடைமுறைகளை முடிக்க, அரசு அதிகாரிகளுக்கு இரண்டு மாதங்களுக்கு மேல் தேவைப்பட்டது. அதனால், ஏப்ரலில் துவங்கும் நிதியாண்டின் முதல் நாளன்றே, பட்ஜெட் அறிவிப்புகள் அமலுக்கு வந்தாலும், முழுமையாக நடைமுறைக்கு கொண்டு வருவது தாமதமானது.


இதையொட்டி, பிரதமர்மோடி தலைமையிலான மத்திய அரசு, முதன் முறையாக, 2017- - 18ம் நிதியாண்டின் மத்திய பட்ஜெட்டை, பிப்., 1ல் தாக்கல் செய்யும் நடைமுறையை அறிமுகப்படுத்தியது.

பிப்., 1ல் தாக்கல்
இந்நிலையில், இரண்டாவது முறையாக, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, மே, 30ல் பொறுப்பேற்றது. இதையடுத்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நடப்பு, 2019- - 20ம் நிதியாண்டு பட்ஜெட்டை, ஜூலை, 5ல் தாக்கல் செய்தார். ஏற்கனவே பின்பற்றி வரும் நடைமுறைப்படி, 2020- - 21ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட், அடுத்த ஆண்டு, பிப்., 1ல் தாக்கல் செய்யப்பட வேண்டும்.

ஆனால், அன்று சனிக்கிழமை, அரசு விடுமுறை நாள் என்பதால், பட்ஜெட் முன்னதாக தாக்கல் செய்யப்படுமா அல்லது தள்ளி வைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்து உள்ளது.

மாற்றம் ஏதுமில்லை
இது குறித்து, மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:வரும் நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை, 2020, ஜன., 31ல் பார்லிமென்டில் தாக்கல் செய்யப்படும். அடுத்த நாள், பிப்., 1, சனிக்கிழமை என்றபோதிலும், ஏற்கனவே கடைப்பிடிக்கப்பட்டு வரும் வழக்கப்படி, மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

அதில் மாற்றம் ஏதும் இருக்க வாய்ப்பில்லை. இவ்வாறு, அவர் கூறினார். கடந்த, 2015- - 16ம் நிதியாண்டு பட்ஜெட், விடுமுறை நாளில் தாக்கல் செய்யப்பட்டது. இரண்டாவது முறையாக, அடுத்த நிதியாண்டு பட்ஜெட், விடுமுறை நாளில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (14)

 • ஆப்பு -

  போன தடவை பட்ஜெட்டுக்கு பட்டுத் துண்டு வாங்கி அதில் கொண்டு வந்து புரட்சி பண்ணினீங்க. இந்த தடவை 18 கஜம் புடவையில் முடிந்து கொண்டாருவீங்க. அவ்வளவு துண்டு விழலாம். ஒரு புறநானூறு பாட்டுக்கு பதில், கலித்தொகை, முதுமொழிக்காஞ்சின்னு நெறைய படிச்சிட்டு வாங்க. தேவைப்படும்.

 • தமிழர்நீதி - சென்னை ,இந்தியா

  ஆமா சரியானநேரம்தான் , மக்களுக்கு சுமை உங்களுக்கு பொழுதுபோக்கு . நல்லா இருப்பீங்க

 • karutthu - nainital,இந்தியா

  இந்த வருடம் வருமானவரி சலுகைகள் (மூத்த குடிமக்களுக்கு ) கிடைக்குமா ? போன வருஷம் 5 லக்ஷம் வரை வருமான வரி கிடையாது ஆனால் 5 லக்சத்திற்கு மேல போனால் கணக்கீடு இரண்டரை லக்ஷத்திலிருந்து ஆரம்பிக்கும் என குழம்பினார்கள் இன்று வரை யாரும் அதை தெளிவு படுத்தவில்லை .இந்தவருடம் நிர்மலா அம்மா என்ன செய்யப்போகிறார்கள் ?

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  சே லட்சம் கோடியை தனது கம்ப்யூட்டரில் என்றும் பார்க்கும் ஒருவர் இவ்வளவு சிம்பிளாக டிரஸ் செய்து கொள்வதா, அதுவும் ஒரே ஒரு சங்கிலியுடன். அங்கே என்னடானா மோடி தனக்கு கிடைத்த பரிசுப்பொருட்களை ஏலத்தில் விட்டு கிடைக்கும் கோடிக்கணக்கான பணத்தை "the fund generated will be used for conservation and rejuvenation of the Ganga". எவ்வளவு வெள்ளந்தியாக இருக்கின்றார்கள் இவர்கள் எல்லாம். இதைத்தான் இந்து இந்தியன் என்பது.

 • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

  பட்ஜெட்டை நவம்பர் முதல் தேதியில் சமர்ப்பித்து நிதியாண்டை ‌‌‌‌‌‌ஜனவரியில் தொடங்கினால் நல்லது.

Advertisement