Advertisement

ஊரக உள்ளாட்சித் தேர்தல் நேற்று 907 பேர் மனுத்தாக்கல்

தேனி:ஆண்டிபட்டி ஒன்றியத்தில் மாவட்ட கவுன்சிலருக்கு இருவர், ஒன்றிய கவுன்சிலருக்கு 5 பேர், ஊராட்சித் தலைவருக்கு 34 பேர், வார்டு உறுப்பினருக்கு 153 பேர் என, 194 பேரும், க. மயிலாடும்பாறை ஒன்றியத்தில் ஒன்றிய கவுன்சிலருக்கு 17 பேர், ஊராட்சித் தலைவருக்கு10 பேர், வார்டு உறுப்பினருக்கு 77 பேர் என, 104 பேர் மனுத்தாக்கல் செய்தனர்.

பெரியகுளம் ஒன்றியத்தில் மாவட்ட கவுன்சிலருக்கு ஒருவர், ஒன்றிய கவுன்சிலருக்கு 21 பேர், ஊராட்சித் தலைவருக்கு 20 பேர், வார்டு உறுப்பினருக்கு 109 பேர் என, 151 பேரும்,தேனி
ஒன்றியத்தில் மாவட்ட கவுன்சிலருக்கு ஒருவரும், ஒன்றிய கவுன்சிலருக்கு 2 பேர், ஊராட்சித் தலைவருக்கு 9 பேர், வார்டு உறுப்பினருக்கு 81 பேர் என, 93 பேர் மனுத்தாக்கல் செய்தனர்.

போடி ஒன்றியத்தில் மாவட்ட கவுன்சிலருக்கு 2 பேர், ஒன்றிய கவுன்சிலருக்கு 26 பேர், ஊராட்சித் தலைவருக்கு 16 பேர், வார்டு உறுப்பினருக்கு 108 பேர் என, 152 பேரும், சின்னமனுார்
ஒன்றியத்தில் மாவட்ட கவுன்சிலருக்கு 2 பேர், ஒன்றிய கவுன்சிலருக்கு 16 பேர், ஊராட்சித் தலைவருக்கு15 பேர், வார்டு உறுப்பினருக்கு 42 பேர் என, 75 பேர் மனுத்தாக்கல் செயதனர்.

உத்தமபாளையத்தில் ஒன்றிய கவுன்சிலருக்கு 10 பேர், ஊராட்சித் தலைவருக்கு 13 பேர், வார்டு உறுப்பினருக்கு 58 பேர் என, 81 பேரும், கம்பம் ஒன்றியத்தில் மாவட்ட கவுன்சிலருக்கு ஒருவரும், ஒன்றிய கவுன்சிலருக்கு 9 பேர், ஊராட்சித் தலைவருக்கு 5 பேர், வார்டு உறுப்பினருக்கு 42 பேர் என,57 பேர் மனுத்தாக்கல் செய்தனர்.

மாவட்டத்தில் உள்ள 8 ஒன்றியங்களில் மாவட்ட கவுன்சிலருக்கு 9 பேர், ஒன்றிய
கவுன்சிலருக்கு 106 பேர், ஊராட்சித் தலைவருக்கு 122 பேர், வார்டு உறுப்பினருக்கு 670 பேர் என மொத்தம் 907 பேர், நேற்று ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட மனுத்தாக்கல் செய்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement