Advertisement

மோடி அரசை எதிர்த்து காங்., ஆர்ப்பாட்டம்! ; சோனியா ஆவேசம்

Share
புதுடில்லி : பா.ஜ., அரசின் பல்வேறு கொள்கைகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்து, 'இந்தியாவை காப்போம்' என்ற பெயரில், டில்லி ராம்லீலா மைதானத்தில், காங்கிரஸ் பொதுக் கூட்டம், நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற, காங்., தலைவர் சோனியா, ''நாடு துண்டாடப்படுவதை எதிர்த்து மக்கள் போராட வேண்டும். மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியை அழித்து, ஜனநாயகத்தை காக்கும் போராட்டத்தில், கடைசி மூச்சு உள்ள வரை, காங்., பின்வாங்காது,'' என, ஆவேசமாக பேசினார். கட்சியின் மூத்த தலைவர்களும், தொண்டர்களும் பெருந்திரளாக பங்கேற்று, பா.ஜ., அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

நாட்டில் பிரிவினையை உண்டாக்கி, மக்கள் மத்தியிலான ஒற்றுமையை சீர்குலைக்கும் நோக்கத்துடன், பா.ஜ., அரசு, கொள்கைகளை வகுத்து வருகிறது என்ற கருத்தை வலியுறுத்தி, 'இந்தியாவை காப்போம்' என்ற தலைப்பில், மாபெரும் பொதுக் கூட்டத்துக்கு, காங்., தலைமை ஏற்பாடு செய்தது.

பொதுக்கூட்டம்கடந்த மாதம், 30ல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட இந்த கூட்டம், பார்லி., குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்று வந்த காரணத்தால், டிசம்பர், 14ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், டில்லி ராம்லீலா மைதானத்தில், இந்த பொதுக்கூட்டம், நேற்று காலை நடைபெற்றது. இதில், காங்., இடைக்கால தலைவர் சோனியா, எம்.பி., ராகுல், பிரியங்கா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம், மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாஹெல், ராஜஸ்தான் துணை முதல்வர் சச்சின் பைலட் உட்பட, பல தலைவர்கள் பங்கேற்றனர்.


கூட்டத்தில், சோனியா பேசியதாவது: பா.ஜ., தலைமையிலான அரசு, இந்த நாட்டை துண்டாடுகிறது. குழப்பம் நிறைந்த தலைவரின் ஆட்சியில், நாடே குழப்பத்தில் சிக்கித் தவிக்கிறது. இந்தியாவின் ஆன்மாவை சுக்குநுாறாக கிழித்தெறியும் தன்மை கொண்ட, குடியுரிமை சட்டத்துக்கு எதிராக, மக்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும். மக்களுக்கு அநீதி இழைத்து துன்புறுத்துவதை விட, மிகப்பெரிய குற்றம் வேறெதுவும் இல்லை. எனவே, அரசியல் சாசனத்தையும், ஜனநாயகத்தையும் காப்பாற்ற, நாம் ஒன்றிணைந்து போராட வேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்த நாட்டையும், ஜனநாயகத்தையும் காக்கும் போராட்டத்தில், கடைசி மூச்சு உள்ள வரை, காங்., பின்வாங்காது. மோடி - ஷா அரசாங்கத்திற்கு, எதைப் பற்றியும் கவலையில்லை. எப்போதும், மக்களிடையே பிளவை ஏற்படுத்தி, உண்மையான பிரச்னைகளில் இருந்து அவர்களை திசை திருப்புவதே, இவர்களின் வாடிக்கை. அரசியல் சாசனத்தை தினமும் மீறும் இவர்கள், அரசியல் சாசன தினத்தை கொண்டாடுவது வேடிக்கையாக இருக்கிறது. இவ்வாறு, அவர் பேசினார்.

நிறைவேற்றவில்லைமுன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேசுகையில், ''பிரதமர் மோடி, ஆறு ஆண்டுகளுக்கு முன், இளைஞர்களுக்கும், விவசாயிகளுக்கும் கொடுத்த வாக்குறுதிகளை, இன்று வரை நிறைவேற்றவில்லை. ''எனவே, சோனியா மற்றும் ராகுலின் கரங்களுக்கு, மக்கள் வலு சேர்க்க வேண்டிய நேரம் வந்துவிட்டது,'' என்றார். முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம் பேசுகையில், ''கடந்த ஆறு மாதங்களில், இந்திய பொருளாதாரம் முற்றிலுமாக சிதைந்துள்ளது. இதை எப்படி சீராக்குவது என்பது பற்றி, அமைச்சர்களுக்கு சுத்தமாக தெரியவில்லை,'' என்றார்.

பா.ஜ.,வால் எல்லாம் சாத்தியம்!லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது, 'மோடியால் எல்லாம் சாத்தியம்' என்ற வாக்கியத்தை, பா.ஜ., அரசு, பிரசாரத்தில் அதிகம் பயன்படுத்தியது.

இந்த வாக்கியத்தை வைத்துக் கொண்டு, காங்., பொதுச் செயலர் பிரியங்கா பேசியதாவது: 'மோடியால் எல்லாம் சாத்தியம்' என்ற வாசகத்தை, மூலை முடுக்கெல்லாம் காண முடிகிறது. அது உண்மை தான். பா.ஜ., ஆட்சியில் தான், வெங்காய விலையை, கிலோ, 100 ரூபாய் வரை உயர்த்த முடியும். கடந்த, 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டத்தை உருவாக்க முடியும். நான்கு கோடி மக்களின் வேலைவாய்ப்பை பறிக்க முடியும். இவ்வாறு, அவர் பேசினார்.

என் பெயர் ராகுல்!'இந்தியாவை காப்போம்' கூட்டத்தில், ராகுல் பேசியதாவது: பார்லிமென்டில் உண்மையை பேசியதற்காக, நான் மன்னிப்பு கேட்க முடியாது. என் பெயர் ராகுல் காந்தி; ராகுல் சாவர்க்கர் இல்லை. நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்ததற்காக, பிரதமர் மோடியும், அவரது உதவியாளர் அமித் ஷாவும் தான், நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (25)

 • Saravanan Kumar - nellai ,இந்தியா

  நாட்டை துண்டாடி வைத்திருப்பதே காங்கிரஸ் தானடா . அதை மோடி அவர்கள் சரி செய்ய முயற்சிக்கிறார் அது உனக்கு பொறுக்க வில்லையா. உன் உடம்பு கானை மறைத்து முகத்தை காட்டி காந்தி என்கிறாய் . மக்கள் விழிப்படைந்து விட்டார்கள். காங்கிரஸ் இந்தியாவில் இருந்து என்று முழுமையாக துடைத்து எறியப்படுகிறதோ அன்று தான் இந்தியா முழு சுதந்திரம் வாங்கிய நாடாக மாறும். அது வரை இந்தியா சுதந்திரம் பெற்ற நாடாக கருத முடியாது. இதை மக்கள் முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும். இல்லை என்றால் இந்தியா மக்கள் தந் தலையில் தானே மண் அள்ளி போட்டதற்கு சமம்.

 • sankar - Nellai,இந்தியா

  காங்கிரஸ்தான் அரசியலில் மதத்தை கலக்கிறது என்பதை மக்கள் இப்போது தெள்ளத்தெளிவாக புரிந்துகொண்டுவிட்டனர் - இனி மதத்தைவைத்து இவர்கள் அரசியல் செய்தால் மக்கள் மிதித்து தள்ளுவார்கள் - எனவேதான் இந்த ஆர்ப்பாட்டம் - இதை இரும்புக்கரம்கொண்டு அடங்குவார் அமித்சா

 • Gnanam Mani - erode,இந்தியா

  உண்மையாக நாட்டை நாசப்படுத்துவது யாரென்று மக்களுக்கு நன்றாக தெரியும்

 • ஜெயந்தன் - Chennai,இந்தியா

  காங்கிரஸும் பிஜேபியும் இந்த நாட்டின் சாபக்கேடு......இரண்டு கட்சிகளுமே மக்களின் எதிரிகள் தான்...மக்களை ஏமாற்றும் கலையில் இரண்டிற்கும் வழிகள் தான் வேறு வேறு...இரண்டையும் விரட்டினால் மட்டுமே நாடு உண்மையான வளர்ச்சியை காண முடியும்......

 • Krish - Bengalooru,இந்தியா

  மன்மோகன் இப்போது சீக்கியர்கள் படுகொலை மற்றும் அதில் நரசிம்ம ராவ் நடவடிக்கை எடுக்காதது பற்றியும் பேசியிருக்கிறார் . இந்த மன்மோகன் இதுவரை அப்பாவி இலக்கை தமிழர்கள் பல ஆயிரம்பேர் பாதுகாப்புப்பகுதியில் இலங்கை ராணுவத்தால் படுகொலை இனக்கொலை நடத்தியதுபற்றி வாய் திறக்கவில்லை .ராவை பற்றி குறை சொல்லும் இவர் தமிழர்கள் கொலை இவர் காலத்தில் நடந்ததைப்பற்றி ஏன் பேசமாட்டேன் என்கிறார் . போகட்டும் இந்த ஆள் , நம் சிதம்பரம் வேட்ட்டிகட்டிய தமிழர் குறைந்தது ஒரு வருத்தம் தெரிவிப்பாரா ???

Advertisement