Advertisement

83 மி.மீ., !கடலுாரில் மழை பதிவு....வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரம்

Share
கடலுார்:கடலுார் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. கடலுாரில் அதிகபட்சமாக 83 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.
கடலுார் மாவட்டத்தில் நவம்பர் மாதம் பெய்ய வேண்டிய இயல்பு மழைக்கு 11 சதவீதம் குறைவாக பெய்தது. டிசம்பர் மாதம் 182.20 மி.மீ., பெய்ய வேண்டிய மழைக்கு, இதுவரை 178.98 மி.மீ., பெய்துள்ளது. கிட்டத்தட்ட 98.18 சதவீதம் பெய்துள்ளது. இந்நிலையில், மீண்டும் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடலுார் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை மாவட்டத்தில் உள்ள 25 நீர் பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்துள்ளதால், நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
நேற்று முன்தினம் காலை 8.30 மணி முதல், நேற்று காலை 8.30 மணி வரை பெய்த மழையளவு வருமாறு:கலெக்ட்ரேட் 83.30 மி.மீ., கடலுார் 83.30, வடக்குத்து 46, சேத்தியாத்தோப்பு 43, வானமாதேவி 38, அண்ணாமலை நகர் 34.30, கீழ்ச்செருவாய் 34, பெலாந்துறை 28.20, காட்டுமன்னார்கோவில் 28, மேமாத்துார் 28, எஸ்.ஆர்.சி. குடிதாங்கி 27.50, சிதம்பரம் 27, ஸ்ரீமுஷ்ணம் 26.20, குப்பனத்தம் 26, லக்கூர் 25.40, விருத்தாசலம் 25.20, பரங்கிப்பேட்டை 25, வேப்பூர் 24, தொழுதுார் 22, காட்டுமயிலுார் 22, புவனகிரி 21, கொத்தவாச்சேரி 20, குறிஞ்சிப்பாடி 19.06, லால்பேட்டை 18.40, பண்ருட்டி 9 மி.மீ., மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக கடலுாரில் 83.30 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement