Advertisement

கம்பமெட்டு ரோட்டில் நெல் கொள்முதல் நிலையம்: விற்பனைக்கு கொண்டு செல்வதில் சிரமம் என புகார்

கம்பம்:கம்பத்தில் நெல் கொள்மு தல் நிலையம் வழக்கமாக இடத்தை தவிர்த்து கம்பமெட்டு ரோட்டில் அமைத்துள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கம்பம் பகுதியில் நெல் அறுவடை துவங்கியுள்ளது. கம்பமெட்டு ரோட்டில் நெல் கொள்முதல் நிலையத்தை நுகர்பொருள்வாணிப கழக அதிகாரிகள் துவக்கி வைத்தனர். இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.கடந்தாண்டு கம்பத்திலிருந்து சுருளிப்பட்டி செல்லும் ரோட்டில், களம் அமைந்துள்ள ஒரு இடத்தில் அமைத்திருந்தனர். இதனால் நெல் காயப்போடுவதற்கு வசதியாக இருந்தது.


விவசாயிகளுக்கும் வயல்களில் இருந்து நெல்மூடைகளை எளிதாக கொண்டு சென்றனர். ஆனால் இந்தமுறை சிரமம் ஏற்பட்டுள்ளது. அறுவடை முடிந்தபின் மூடைகளை ரோட்டிற்கு மேற்கு பக்கம் 2 கி.மீ., துாரத்தில் உள்ள மையத்திற்கு கொண்டு செல்ல நேரம், பணவிரயம் ஏற்படும். அதிகாரிகள் கூறுகையில், கடந்தாண்டு வைத்திருந்த இடத்திற்கு வாடகை, மின்கட்டணம் செலுத்த வேண்டியிருந்தது.


ஆனால் தற்போதைய இடம் அரசிற்கு சொந்தமானது. எனவே செலவின்றி அமைத்துள்ளோம்,' என்றனர். நெல் கொள்முதல் நிலையத்தில் கிலோ ரூ. 19.50 பைசாவிற்கு வாங்குகின்றனர். 60 கிலோ கொண்ட மூடைக்கு ரூ. ஆயிரத்து 170 வரை கிடைக்கிறது. எனினும் அதனை ரோட்டிற்கு கிழக்கு பக்கம் அமைக்க அதிகா ரிகள் முன்வர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement