Advertisement

1,760 ஓட்டுச்சாவடிகளுக்கு 5,280 ஓட்டுபெட்டிகள் தயார்

சிவகங்கை:ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாவட்டத்தில் ஆயிரத்து 760 ஓட்டுச்சாவடிகளில் வாக்களிக்க 5 ஆயிரத்து 280 ஓட்டு பெட்டிகள் தயாராகி வருகின்றன.

மாவட்டத்தில் டிச.,27 ல் சிவகங்கை, காளையார்கோவில், திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி ஒன்றியம், இரண்டாம் கட்டமாக டிச.,30 அன்று எஸ்.புதுார், சிங்கம்புணரி, திருப்புத்துார், கல்லல், சாக்கோட்டை, கண்ணங்குடி, தேவகோட்டை ஆகிய ஒன்றியங்களில் மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடக்க உள்ளது.

சிவகங்கை ஒன்றியத்தில் 200, காளையார்கோவில் 192, மானாமதுரை 145, இளையான்குடி 193, திருப்புவனம் 174, கல்லல் 166, திருப்புத்துார் 152, தேவகோட்டை 148, சாக்கோட்டை 139, கண்ணங்குடி 64, சிங்கம்புணரி 108, எஸ்.புதுார் 79 உட்பட மாவட்டத்தில் ஆயிரத்து 760 ஓட்டுச்சாவடிகள் தயார் நிலையில் உள்ளன.

ஒவ்வொரு வாக்காளரும் தலா 4 ஓட்டுக்கள் பதிவு செய்ய வேண்டும். இதற்காக ஓட்டுச் சாவடிக்கு தலா 2 முதல் 3 ஓட்டு பெட்டி வைக்க மாவட்ட தேர்தல் அலுவலகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக 5 ஆயிரத்து 280 ஓட்டுப்பெட்டிகள், பழுதாகும் பட்சத்தில் கூடுதல் தேவைக்கென ஓட்டு பெட்டிகள் வைத்துள்ளனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement