Advertisement

மதுரைஎய்ம்ஸ்: 3 மாதத்தில் சர்வதேச டெண்டர்

இந்த செய்தியை கேட்க

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: ''மதுரை, தோப்பூர் எய்ம்ஸ் பணிக்கு, மூன்று மாதங்களில், சர்வதேச டெண்டர் அழைப்பு விடுக்கப்படும்,'' என, சுகாதாரத் துறை முதன்மை செயலர் பீலா ரஜேஷ் தெரிவித்தார்.
மதுரையில், எய்ம்ஸ் திட்டத்திற்கு, கடன் வழங்கும் ஜப்பான் நிறுவனமான, 'ஜிக்கா' அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின், அவர் கூறியதாவது:எய்ம்ஸ் சுற்றுச்சுவர் கட்டும் பணி நடக்கிறது. இதர கட்டுமான பணிகள் விரைவில் துவங்கும். தோப்பூரில் நடத்திய ஆய்வு அடிப்படையில், ஜிக்கா நிபுணர்கள், எய்ம்ஸ்கான திட்ட மதிப்பீட்டை முழு வீச்சில் தயாரிக்கின்றனர்.நாம் ஏற்கனவே, 1,264 கோடி ரூபாய் ஆகும் என கணித்திருந்தாலும், அவர்களின் முடிவே இறுதியானது. மூன்று மாதங்களில், மத்திய அரசிடம் திட்ட மதிப்பீட்டை தாக்கல் செய்து, கடன் வழங்க வாய்ப்புள்ளது. பின், சர்வதேச அளவில் டெண்டர் அழைப்பு விடுக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (10)

 • Sri,India - India,இந்தியா

  தமிழகம் முழுவதுமே தரமற்ற கட்டுமானங்கள் ,ரோடும் போட்டு காசு பார்க்கும் கும்பல்கள் அதிகமாகி விட்டன .எங்காவது , மாநில அரசு போட்ட ரோடுகள் தொடர்ந்து ஒரு கிலோமீட்டர் தரமானதாக உள்ளது என யாராவது காண்பித்தால் நிச்சயம் அவர்களுக்கு பரிசு கொடுக்கலாம் அந்த அளவிற்கு ஊழல் பேய்கள் அதிகமாகி விட்டன எந்த கட்டுமான வேலையையும் யாரும் தரஉறுதி சான்று கொடுப்பதில்லை ,ஆய்வு செய்யவில்லை என மக்கள் புலம்பி வருகின்றனர் . பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்ட பாலங்கள் ,கட்டிடங்கள் எல்லாம் நிமிர்ந்து நிற்கின்றன ....கழக கும்பல்களின் கட்டுமானங்கள் எல்லாம் மக்கள் பணத்தை தின்று மக்களையும் சாக வைக்கின்றன .

 • natarajan s - chennai,இந்தியா

  இங்கு AIIMS வரவேண்டும் என்று போராடியது மக்களுக்கு மருத்துவ பணியாற்ற மட்டுமே என்று நினைப்பவர்கள் நினைப்பில் மண். இதைவைத்து அருகில் நிலத்தை வளைத்து போட்டுள்ள அரசியல் வாதிகளின் நில மதிப்பை உயர்த்தவும், சுமார் 2000 கோடி buliding contract எடுத்து பணம் சம்பாதிப்பது மட்டுமே நோக்கம். விரைவில் நோக்கம் நிறைவேறிவிடும். எல்லாம் உதயகுமாருக்கே வெளிச்சம்.

 • வெகுளி - Maatuthaavani,இந்தியா

  சூதானமா டெண்டர் விடுங்க..... ஏமாந்து திருட்டு கழக கான்டராக்டர்களுக்கு டெண்டர் குடுத்தீங்கன்னா அப்புறம் மாட்டாஸ்பத்திரி கூட கட்ட முடியாது....

  • selva - Chennai,இந்தியா

   உங்கள போல உத்தம புருஷர்களை பார்க்கவே முடியாது. தமிழ்நாட்டில் இருக்க பிடிக்கலைன்னா போங்க ராமர் பிரதேசத்துக்கு . அங்க தேனும் பாலும் ஓடுது

  • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

   செல்வா .. டீம்கா காரனுக்கு கான்டராக்ட் குடுக்கப்படாதுன்னு சொன்னா தமிழ்நாட்டுல இருக்கப்டாதா? என்னடா இது புதுசா இருக்கு? டீம்கா காரன் எல்லாவனும் இப்படி மூளை குறைபாடு உள்ளவனா இருந்தா கட்சி எப்படி உருப்படும்?

  • BJP YOGS - sharjah,ஐக்கிய அரபு நாடுகள்

   சூதானமா டெண்டர் விடுங்க..... ஏமாந்து திருட்டு கழக கான்டராக்டர்களுக்கு டெண்டர் குடுத்தீங்கன்னா அப்புறம் மாட்டாஸ்பத்திரி கூட கட்ட முடியாது....

  • BJP YOGS - sharjah,ஐக்கிய அரபு நாடுகள்

   சூதானமா டெண்டர் விடுங்க..... ஏமாந்து திருட்டு கழக கான்டராக்டர்களுக்கு டெண்டர் குடுத்தீங்கன்னா அப்புறம் மாட்டாஸ்பத்திரி கூட கட்ட முடியாது.... இது கரெக்ட்

  • THENNAVAN - CHENNAI,இந்தியா

   பகுத்தறிவை மற்றவனுக்கும் ,பணத்தறிவை தனக்கும் வைத்துக்கொண்டு வாழ்ந்தவர், வாழ்கிறவர் தலைவன் தி மு கா காரன் ,அதனால செல்வா உங்களைப் போன்றவர்கள் இருக்கும் வரை தி மு க வை தமிழகத்தில் இருந்து அழிச்சுக்க முடியாது

 • Anandan - chennai,இந்தியா

  அப்போ மேக் இன் இந்தியாவை ஊத்தி மூடிட்டீங்க?

  • selva - Chennai,இந்தியா

   அதுவா

Advertisement