dinamalar telegram
Advertisement

அரசியல்ல இதெல்லாம்... சகஜமப்பா! மீண்டும் நிரூபித்தது தி.மு.க.,!

Share
Tamil News
கோவை:'இடிந்து விழும் நிலையில், உள்ள எங்கள் வீடுகள் பிரச்னையில், உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதியளித்துள்ளார்.

ஆகவே, யாரும் எங்கள் பிரச்னையை அரசியலாக்க வேண்டாம்' என்று வேண்டுகோள் விடுத்தனர், சிங்காநல்லுார் வீட்டுவசதி வாரிய குடியிருப்புவாசிகள்.'அதெப்படி விட முடியும்' என்று நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் இறங்கி விட்டது, தி.மு.க., தேர்தல் நேரமாயிற்றே!கோவை, சிங்காநல்லுார் உழவர் சந்தை அருகே, 17.55 ஏக்கரில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில், 960 வீடுகள் இருக்கின்றன.
வீடுகள் இடிந்து விழும் தருவாயில் இருப்பதால், உயிர் பயத்தில் அச்சத்துடன் வசிக்கின்றனர்.காலி செய்யுமாறு வீட்டுவசதி வாரியம் வலியுறுத்தி வருகிறது.இந்நிலையில், உடனடியாக புதிய குடியிருப்பு வீடுகள் கட்டித்தர, கோரிக்கையை முன்வைத்து அப்பகுதி மக்கள், நேற்று கலெக்டரிடம் மனு அளித்தனர்.குடியிருப்பு சங்க செயற்குழு உறுப்பினர் மோகன சுந்தரி கூறுகையில், ''சேதமடைந்த இக்குடியிருப்பில், அடிக்கடி விபத்துக்கள் நடந்து, பலர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
6,7 வீடுகளை தவிர பிற அனைத்தும் சேதமடைந்துள்ளன.மாவட்ட நிர்வாகம் புதிய குடியிருப்பு கட்டித்தருவதற்கான பரிந்துரைகளை முன்வைக்க, கோரிக்கை மனுவை, கலெக்டரிடம் வழங்கியுள்ளோம். இதுதொடர்பாக, சிறப்பு குழு அமைக்கப்பட்டு உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார். இச்சிக்கலை பயன்படுத்தி, எந்த கட்சியினரும் அரசியல் செய்ய வேண்டாம்,'' என்றார்.
அதெப்படி விட முடியும்!உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆளுங்கட்சிக்கு எதிராக லட்டு போல் கிடைத்துள்ள இந்த வாய்ப்பை, தி.மு.க.,வினர் விடுவார்களா என்ன?சிங்காநல்லுார் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு முன், தடையை மீறி, எம்.எல்.ஏ., கார்த்திக் தலைமையில் நேற்று, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு கட்டிக்கொடுத்த வீடு என்பதால், குடியிருப்புதாரர்களுக்கு புதிதாக கட்டிக்கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினர். 150 பெண்கள் உட்பட, 550 பேர் பங்கேற்றனர். சிறிது நேரம் ஆர்ப்பாட்டம் செய்து விட்டு, கலைந்து சென்றனர்.அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா!
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • Bhaskaran - Chennai,இந்தியா

    திமுக ஆட்சிக்காலத்தில் கட்டிக்கொடுக்கப்பட்ட வீடுகளோ

Advertisement