Advertisement

தினகரன், மூச் காட்டியிருக்க மாட்டாரே!

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலர் தினகரன், தர்மபுரி மாவட்டம், அரூருக்கு வந்தார். அப்போது, நிருபர்களிடம் அவர், 'தமிழகத்தில் வார்டு வரையறை, இட ஒதுக்கீட்டை சரியாக செய்து, உள்ளாட்சி தேர்தலை நடத்தினால், சிறப்பானதாக இருக்கும். ஊரக பகுதிகளுக்கு மட்டும், இரண்டு கட்டங்களாக தேர்தலை நடத்தி, ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி, எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில், ஆளுங்கட்சி உள்ளது.

'ஐதராபாதில், பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில், போலீஸ் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டது தவறாக இருந்தாலும், இது போன்ற சம்பவங்கள் வாயிலாக, கயவர்களுக்கு பயம் வரும். பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில், தமிழக அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. ஜெயலலிதா இருந்திருந்தால், இந்த விவகாரத்தை எப்படி கையாண்டு இருப்பார் என்பது, உங்களுக்கு தெரியும்' என்றார்.

இதை கேட்ட கட்சி நிர்வாகி ஒருவர், 'ஜெயலலிதா இருந்திருந்தால், அண்ணன் தினகரன் இப்படி, இங்கே பேசிக்கிட்டு இருக்க மாட்டாரே...' எனக்கூற, அருகில் இருந்தோர், கமுக்கமாக சிரித்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா

    அம்மாவால் அடித்து விரட்டப் பட்ட கூட்டம் அம்மா பெயரில் பிழைப்பு நடத்துகிறது.

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    ஆயிரம் குற்றங்கள் இருந்தாலும், தன் கட்சியினர் பொள்ளாச்சி டைப்பில் சிக்கியிருந்தால், மிகக் கடும் நடவடிக்கை, வெளியேற்றம் என்று கண்டிப்பாகச் செய்திருப்பார் அம்மா இப்போதோ ஒரு வருஷமாகத் தூங்க வைத்து, சமாதி கட்டப் பார்க்கிறார்கள். தன் சபையினர் பற்றிய புகார்களைக் கண்டும்காணாமல் இருப்பதுதான் ஏபிஎஸ்சின் ஆட்சி அழகு

Advertisement