Advertisement

தொடு உணர்வை தரும் ஹோலோகிராம்

மனிதர்களிடம் பேசவும், தொட்டால் தொடு உணர்வைத் தரவும் வல்ல முப்பரிமாண ஹோலோகிராம் கருவியை, பிரிட்டனைச் சேர்ந்த சசெக்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.செவி உணரா ஒலி அலைகளை எழுப்பும் சிறிய மேடையை அமைத்து, அதன் மேல், 2 மி.மீ., அளவே உள்ள ஒற்றை பிளாஸ்டிக் குளிகையை மிதக்க வைக்கின்றனர். ஒலிக் கருவியின் ஒலி அலைகள், பிளாடிக் குளிகையை விரும்பிய படி அலைக்கழிக்கிறது.

இந்தக் குளிகையின் மேல் ஒளியைப் பாய்ச்சினால் அதன் அதிவேக அசைவுகள் மனிதக் கண்களுக்குத் தெரியும்.இதை வைத்து சிறிய பட்டாம்பூச்சி பறப்பது போல் தோற்றத்தை விஞ்ஞானிகள் ஏற்படுத்தினர். அதுமட்டுமல்ல, குளிகையை மேலும் அதிர்வித்து, மனிதக் குரல் போன்ற ஒலியையும் ஏற்படுத்த முடிகிறது. இதன் குறுக்கே கையை விடும்போது, பறக்கும் பட்டாம்பூச்சியை தொடும் உணர்வு ஏற்படுகிறது.

மேலும் சில குளிகைகளை ஒலி மேடையில் மிதக்கவிட்டு கட்டுப்படுத்தினால், சிக்கலான உருவங்களையும் பேசும் ஒலியையும் உருவாக்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.சில ஆண்டுகளில் பேசும் மனித உருவம் போன்ற ஹோலோகிராமை உருவாக்கிவிட முடியும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement