Advertisement

துாரிகையாகும் ட்ரோன்!

சில ஆண்டுகளுக்கு முன், நியூயார்க்கைச் சேர்ந்த ஓவியர் காட்சு, ட்ரோன்களை வைத்து சுவரில் ஓவியங்களை வரைந்து அசத்தினார். இப்போது அவர் சுவர்கள், பெரிய இரும்புப் பதாகைகளில் ஓவியம் வரைய உதவும் ஓரு ட்ரோனை வடிவமைத்திருக்கிறார்.

வண்ணம் நிரம்பிய ஒரு தகர டப்பாவை, இந்த ட்ரோனில் பொருத்த முடியும். ஒரு முறை மின்னேற்றம் செய்தால், 10 நிமிடங்கள் தான் இந்த ட்ரோன் பறக்கும்.ஆனால், சுவரில் மோதாமல், சில குறிப்பிட்ட தொலைவில் பறக்கும் இந்த ட்ரோனை, எங்கு வேண்டுமானாலும் நகர்த்தி, வண்ணங்களை ஸ்பிரே செய்யும் கட்டுப்பாடுகளை ஓவியருக்குத் தருகிறது ஒரு கட்டுப்பாட்டுக் கருவி.

இதனால், அதிக உயரமான இடங்களில் தொங்கிக்கொண்டு, உயிரை பணயம் வைத்து ஓவியங்கள் வரைவதை தவிர்க்க முடியும். அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரவுள்ள இந்த ஓவிய ட்ரோனின் விலை கிட்டத்தட்ட,2 லட்சம் ரூபாய்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement