ADVERTISEMENT
குன்னுார்:குன்னுாரில் சேகரமான, 'பிளாஸ்டிக்' கழிவுகளை, 'பர்னஸ் ஆயில்' தயாரிக்கும் வகையில், ஐதராபாத் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
குன்னுார் நகராட்சிக்கு உட்பட்ட, 30 வார்டுகளில் சேகரமாகும் குப்பை ஒட்டுப்பட்டறை பகுதியில் உள்ள குப்பை குழியில் கொட்டப்படுகின்றன. இங்கு கடந்த மாதம் மாவட்ட நிர்வாகம் ஒத்துழைப்புடன் 'கிளீன்' குன்னுார் அமைப்பு சார்பில், 'குப்பை' கூள மேலாண்மை பூங்கா உருவாக்கப்பட்டது.மேலும், பிளாஸ்டிக் மறுசுழற்சிக்கு, 7 லட்சம் ரூபாய் மதிப்பில் 'பேலிங்' இயந்திரம் பொருத்தப்பட்டது.
குப்பை குழிக்கு, வரும் பிளாஸ்டிக் உட்பட குப்பைகளை, நகராட்சியின் ஒத்துழைப்புடன் 'கிளீன் குன்னுார்' அமைப்பு சார்பில், தனித்தனியாக பிரிக்கப்பட்டு வருகிறது.இதற்காக நகராட்சி துப்புரவு பணியாளர்களுடன் இணைந்து,'கிளீன் குன்னூர்' தன்னார்வலர்கள் மற்றும் இவர்கள் மூலம் நியமிக்கப்பட்ட, 6 பணியாளர்கள் இவற்றை பிரித்து வருகின்றனர்.இதுவரை, 6 டன் பேப்பர், 7 டன் பிளாஸ்டிக் உட்பட, கண்ணாடி பாட்டில்கள், செருப்பு, ரப்பர், துணி வகைகள், 'எலக்ட்ரானிக்' கழிவுகள், 32 டன் பிரிக்கப்பட்டுள்ளது.
'கிளீன் குன்னூர்' அமைப்பு நிர்வாகிகள் கூறுகையில்,'பேலிங் இயந்திரம் மூலம் தயார் படுத்தப் பட்ட, 7 டன் பிளாஸ்டிக், ஐதராபாத்தில் உள்ள நிறுவனத்துக்கு, 'பர்னஸ் ஆயில் ' தயாரிக்க அனுப்பப்பட உள்ளது. மற்ற பேப்பர் உள்ளிட்டவை இங்குள்ளவர்களுக்கு வழங்கப்படுகிறது. இதற்கான தொகையை, மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில், 'பிளாஸ்டிக்' பிரிவுக்கும் பணியாளர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட உள்ளது.
இந்த முயற்சி வெற்றி பெற்றால், மாவட்டம் முழுவதும் இதுபோன்று சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை, பல நல்ல பணிகளுக்கு பயன்படுத்த முடியும். இதற்கு மாவட்ட மக்களும்; வியாபாரிகளும் ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர்,' என்றனர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!