Advertisement

கெலவரப்பள்ளி அணைக்கு சீரான நீர்வரத்து: தென்பெண்ணையில் 320 கன அடி திறப்பு

ஓசூர்: கெலவரப்பள்ளி அணைக்கு, கடந்த ஐந்து நாட்களாக சீரான நீர்வரத்து உள்ள நிலையில், தென்பெண்ணை ஆற்றில் தொடர்ந்து, 320 கன அடி திறந்து விடப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், கெலவரப்பள்ளி அணைக்கு கடந்த, 3ல் வினாடிக்கு, 568 கன அடி நீர்வரத்து இருந்தது. அணையில் போதிய நீர் இருப்பு இருந்ததால், தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு, 480 கன அடியும், வலது, இடது கால்வாயில், 88 கன அடியும் திறந்து விடப்பட்டது. நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால், அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிய துவங்கி கடந்த, 4 முதல், நேற்று காலை வரை தொடர்ந்து, ஐந்து நாட்களாக, 408 கன அடி நீர்வரத்து இருந்தது. சீரான நீர்வரத்தால், தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு, 320 கன அடியும், வலது, இடது கால்வாயில், 88 கன அடியும் என, அணைக்கு வந்த, 408 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டது. அணையின் மொத்த உயரமான, 44.28 அடியில், 41.66 அடிக்கு நீர் இருப்பு உள்ளது. நீர்பிடிப்பு பகுதியில் போதிய மழை இல்லாததால், அணைக்கு வரும் நாட்களில் நீர்வரத்து மேலும் குறைய வாய்ப்பு உள்ளதாக, பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement