Advertisement

குழுக்களாக முகாமிட்டுள்ள யானைகள்: வனத்துறையினர் தொடர் கண்காணிப்பு

Share
ஓசூர்: ஓசூர், வனச்சரக பகுதியில் பல்வேறு குழுக்களாக, 85க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளதால், வனத்துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கர்நாடகா வனப்பகுதியில் இருந்து வெளியேறிய, 150க்கும் மேற்பட்ட யானைகள், தமிழக வன எல்லையான ஜவளகிரி வனச்சரகத்துக்கு கடந்த மாதம் இடம் பெயர்ந்தன. இவற்றில், 85க்கும் மேற்பட்ட யானைகள் தனியாக பிரிந்து, பல்வேறு குழுக்களாக தேன்கனிக்கோட்டை வனச்சரகத்துக்கு வந்தன. கடந்த சில நாட்களுக்கு முன், அங்கிருந்து வெளியேறிய யானைகள் கூட்டம், ஓசூர் வனச்சரகத்திற்கு இடம் பெயர்ந்தன. இதன்படி, போடூர்பள்ளம் வனப்பகுதியில், 25 யானைகள், சானமாவு காப்புக்காட்டில், 12 யானைகள், ஊடேதுர்க்கம் வனப்பகுதியில், 50க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளன. ஓசூர் வனச்சரகத்தில் மொத்தமாக, 85க்கும் மேற்பட்ட யானைகள், பல்வேறு குழுக்களாக முகாமிட்டுள்ளன. வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும், வனப்பகுதியை ஒட்டிய கிராம மக்கள், விறகு சேகரிக்கவோ, ஆடு, மாடு மேய்க்கவோ வனப்பகுதிக்குள் செல்ல வேண்டாம் என, வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். இரவில் விவசாய நிலங்களுக்குள் புகுந்து, யானைகள் பயிர் சேதம் செய்து வருவதால், விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement