Advertisement

சர்வீஸ் ரோடு ஆக்கிரமிப்பு: வாகன ஓட்டிகள் அவதி

Share
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி- தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் மோட்டூர் பிரிவு சாலையில் அடிக்கடி விபத்துகள் நடந்து வந்தது. இதையடுத்து மோட்டூர் மற்றும் அதை சுற்றியுள்ள பல கிராமங்களை சேர்ந்தவர்கள் செல்ல சாலையின் இடது புறம் சார்வீஸ் ரோடு புதியதாக அமைக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக இந்த சர்வீஸ் சாலை அருகில் கார் ஷோரூம் வைத்துள்ளவர்கள் சாலையில் கார் பார்க்கிங் செய்து வருகின்றனர். எனவே, இந்த வழியில் வாகனங்கள் சென்று வர முடியாத நிலையில் வாகன ஓட்டிகள், 2 கி.மீ., தூரம் சென்று அவதானப்பட்டி அருகே, தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement