Advertisement

கண்ணாடி டம்ளர் மீது யோகாசனம்

ராஜபாளையம்:ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி நடுத்தெருவில் உள்ள அரசு உதவி பெறும் விநாயகர் துவக்கப் பள்ளியில், திருக்கார்த்திகையை முன்னிட்டு யோகாசனப் போட்டி நடந்தது. தமிழ்நாடு யுனைட்டட் யோகா சங்க தலைவர் அழகுமுருகன் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியை ஞானசவுந்தரி முன்னிலை வகித்தார். இதில் 4ம் வகுப்பு மாணவர்கள் கலந்து கொண்டனர். மாணவர்கள் கண்ணாடி டம்ளர் மீது பத்மாசனம், ஏகபாதசிரசாசனம், பத்ராசனம் உள்ளிட்ட யோகாசனங்கள் செய்து உடல் முழுவதும் தீபங்கள்ஏற்றி சாதனை படைத்தனர். ஏற்பாடுகளை யோகா ஆசிரியர் செல்வம் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

    மேலும் செய்திகள் :

Advertisement