Advertisement

பஸ் மோதி பலியான பிச்சைக்காரர் பையில் ரூ.10 ஆயிரத்து 100

காரைக்குடி:காரைக்குடி புது பஸ் ஸ்டாண்ட் எதிரே நடந்து சென்ற அடையாளம் தெரியாத பிச்சைக்காரர் மீது அரசு பஸ் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது பையில் ரூ.10 ஆயிரத்து 100 சிக்கியது.
அறந்தாங்கி - திண்டுக்கல் நோக்கி சென்ற அரசு பஸ், நேற்று காலை 9:20 மணிக்கு காரைக்குடி புது பஸ் ஸ்டாண்டில் இருந்து புறப்பட்டது. அப்போது அடையாளம் தெரியாத 50 வயதுள்ள பிச்சைக்காரர் மீது பஸ் மோதியதில், பலியானார். பிரேத பரிசோதனைக்காக காரைக்குடி போலீசார் அவரையும், அவரது பையுடன் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்த நர்சு ஒருவர் பையில் இருந்த பணத்தை எண்ணிய பின்னர் தான், போலீசிடம் ஒப்படைப்போம் என தெரிவித்துவிட்டார். முதியவரின் பையில் 10 ஆயிரத்து 100 ரூபாய் இருந்தது. இன்ஸ்பெக்டர் சுந்தரமகாலிங்கம், பஸ் டிரைவர் அருண்குமார் மீது வழக்கு பதிந்துள்ளார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement