Advertisement

பரிசு! ஹெல்மெட் அணிந்தால் மரக்கன்று, துணிப்பை....வித்தியாசமான விழிப்புணர்வு

Share
வேளச்சேரி:தரமணியில், ஹெல்மெட் அணிந்த வாகன ஓட்டிகளுக்கு, மரக்கன்று, துணிப்பை வழங்கியதுடன், அவர்கள் வாயிலாக, இதர வாகன ஓட்டிகளுக்கு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

வாகன ஓட்டிகள், ஹெல்மெட் அணிவதை, அரசு கட்டாயமாக்கி உள்ளது. இதற்காக, அபராதம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி வழியாக, போக்குவரத்து போலீசார், பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருந்தாலும், சிலர் ஹெல்மெட் அணியால் வாகன ஓட்டுகின்றனர். இதை தடுக்க, ஹெல்மெட் அணிபவர்கள் வாயிலாக, ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, வேளச்சேரி போக்குவரத்து போலீசார் முடிவு செய்தனர்.

இதையடுத்து, 'கிரீன்வாய்ஸ்' என்ற அமைப்புடன் சேர்ந்து, ஹெல்மெட் அணிந்து வருவோருக்கு, மரக்கன்று மற்றும் துணிப்பை வழங்க முடிவு செய்தனர். இந்நிகழ்ச்சி, நேற்று, தரமணி, எஸ்.ஆர்.பி., டூல்ஸ் சந்திப்பில் நடந்தது. ஹெல்மெட் அணிந்த, 100 வாகன ஓட்டிகளுக்கு, மரக்கன்று கொடுத்தனர். அதேபோல், 100 வாகன ஓட்டிகளுக்கு, துணிப்பை வழங்கினர்.அதோடு, துண்டு பிரசுரம் கொடுத்து, ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு வழங்க, அவர்களிடம் வலியுறுத்தினர். இதன்மூலம், ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்க முடியும் என, போலீசார் நம்புகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement