Advertisement

டில்லியில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி

Share
புதுடில்லி: டில்லியில் உள்ள தொழிற்சாலை தீவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். பிரதமர் நிவாரண நிதியில் இருந்தும் நிவாரணம் தலா ரூ. 2 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது.

டில்லியில் 43 பேர் உயிரை பறித்த, ராணி ஜான்சி சாலையில் உள்ள தொழிற்சாலையை முதல்வர் கெஜ்ரிவால் பார்வையிட்டார். பின்னர் அவர் கூறுகையில், உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். காயமடைந்தோருக்கு ரூ.1 லட்சம் நிதியுதவியுடன், இலவச சிகிச்சை வழங்கப்பட உள்ளது. தீவிபத்து தொடர்பாக நீதி விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக கூறினார். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.


டில்லி அமைச்சர் இம்ரான் ஹூசைன் கூறுகையில், இது மிகவும் துயரமான சம்பவம். இந்த விபத்திற்கு காரணமானவர்களை கண்டறிந்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க விசாரணை நடத்தப்படும் என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (9)

  • ஆப்பு -

    மொத்தமாக கூட்டி 15 லட்சமா குடுத்திரலாமே... உயிரோட இருப்பவங்களுக்குத்தான் குடுக்க முடியலே...

  • Balaji - Khaithan,குவைத்

    ஒரு உயிருக்கு நிவாரணம் எவ்வளவு கொடுத்தாலும் ஈடாகாது...... ஆனால் உரியவர்களுக்கு இப்போதைய நிவாரணம் போய் சேர வேண்டும்........ இதாவது அவர்கள் இந்த துயரத்திலிருந்து மீண்டுவர ஏதாவது ஒரு பயனுள்ள விதத்தில் இருக்கும்.......

  • sathyam - Delhi,இந்தியா

    இந்த 10 லட்சம் கூட சம்பந்த பட்டவர்களின் குடும்பத்திற்கு போகுமா என்பது சந்தேகமே . இதுவரை இது போல நிகழ்வுகளுக்கு நடந்த விசாரணை எல்லாம் கண் துடைப்பு . அரசு அதிகாரிகள் -அரசு இயந்திரம் இரண்டும் தான் இதற்கு காரணம். இதுவரை ஒரு அரசு அதிகாரிகளாவது தண்டனை அடைந்த சரித்திரம் உண்டா? கெஜ்ரியின் பரிசு , தில்லி மக்களுக்கு .

  • raman - Madurai,இந்தியா

    இன்று உயிர் போனவுடன் இவ்வளவு செலவழிக்கும் அரசு,பாது காப்பு நடவடிக்கைகளுக்கு செலவு செய்திருந்தால் உயிர்கள் போயிருக்காது. தொழிற்சாலைகளில் , தீ விபத்து தடுப்பு, மின்சார சாதனங்களில் பாது காப்பு, சுற்றுச் சூழல் பாது காப்பு, முதலியவற்றை சோதனை செய்யும் அதிகாரிகள், குறைபாடுகளைக் களையாமல், அபராதம் விதித்து ,அனுமதி வழங்கி விடுகிறார்கள். தொழிலதிபர்களும் அபரதத்தைக் கட்டிவிட்டு,பாது காப்பை மேம்படுத்த முயற்சி செய்யாமல் விடுவதால் விபத்துக்கள் ஏற்படுகின்றன. விபத்துக்கு அரசு நஷ்ட ஈடு, தமிழ்நாட்டில் அரசு வேலை என்று போய்க்கொண்டிருக்கிறது.

  • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

    என்பது லட்சம் தான் இன்றைய இழப்பீடு வழங்கப்படவேண்டிய தொகை. மனித உயிர்கள் விலைமதிக்க முடியாதது தான் அதற்காக விலையில்லை என்று கொள்ளக்கூடாது. இன்சூரன்ஸ் கம்பனிகள் உயிருக்கு அவர்களின் கடந்த மூன்றாண்டுகால வருமானத்தின் அடிப்படியில் மதிப்பேடு செய்வது போலவோ அல்லது அரசின் கருணை தொகையாகவோ இதை கருத கூடாது. விமான விபத்தில் உயிரிலினால்தால் அதில் பயணிகளின் அலட்சியம் கொஞ்சமும் இல்லை அதற்காக என்பது லட்சதிக்ரு குறைவாக இழப்பீடு தருவதில்லை. அதே போலத்தான் இந்த துயர சம்பவத்திலும். அரசின் பல்வேறு துறைகளின் அலட்சியம் முதல் நிர்வாக சிக்கல்கள் வரை தோல்வி அடைவதால் விபத்துக்கலேற்படுவது நிச்சயமான ஒன்று. தொழிலார்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு பல்வேறு அமைப்புக்கள் இருக்கின்றன அவைகள் பெரும்பாலான நேரங்களில் ஹிபேர்னாட் நிலையில் இருப்பது துரதிர்ஷ்டாம் அந்த துரதிர்ச்சத்திற்காகத்தான் இழப்பீடு. கோல்கட்டாவில் பாலம் இடிந்து விழுந்தாலும் சரி சென்னையில் விளம்பர பலகை விழுந்து மரணம் சம்பவித்தாலும் சரி டில்லியில் தீயில் கருகி இறந்தாலும் சரி, அரசின் குறைந்த பட்ச இழப்பீடுகள் என்பது லட்சமாக தான் இருக்கவேண்டும். அதுவே எனது கோரில்க்கை. அது தவிர அவரவர்கள் தனிப்பட்ட முறையிலோ அல்லது குழுவாகவோ எடுத்திருக்கும் இன்சூரன்ஸ் தனியாக தரப்படவேண்டும். அதை இதில் சேர்த்து கணக்கீடு செய்யக்கூடாது. கெஜ்ரிவால் அவர்கள் செல்லும் அந்த பகுதிகளை பாருங்கள் எவ்வளவு ஆபத்தான பகுதியாக இருக்கிறது, குறுகலான சத்துக்கள் விபத்து என்றால் தப்பிக்க வலி இல்லாத பாதை, வெளியிலிருந்து பாதுகாப்பிற்கு ஆபத்து உததிக்கு வரையலாத சூழல் என்று தெரிகிது. காசி விஸ்வநாதர் கோவில் சுற்றுப்புறத்தை போலவே கூட்டம் அதிகம் வெளியேற வழியில்லை இது அன்றாட நிகழ்வுகள். நகர அமைப்பு வரையை மட்டும் பெற்று கொள்கிறது. வெளியேற்றும் மூச்சுக்காற்றுகள் அதிகம். சுவாசிக்க தேவையான சராசரி அளவில் கூட அங்கே oxygen கிடைப்பதில்லை. இது போன்ற பகுதிகளில் பிறந்து அங்கு ஒரு பத்து வருடம் வாழ்தல் போதும் நெஞ்சம் நிச்சயம் 56 இன்ச் கு விரிவடைந்து விடும். பிராண வாயு கிடைக்கவே அரிதான பகுதிகள் போல. செவிடன் காதில் ஊதிய சங்கு. (இந்த தலைப்பில் எழுதியாயிற்று)

Advertisement