Advertisement

டில்லி தொழிற்சாலையில் பயங்கர தீ: 43 பேர் பலி; 50க்கும் மேற்பட்டோர் காயம்

முழு விபரம்:

இந்த செய்தியை கேட்க

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 43 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. தீயைணைக்கும் பணியில் வீரர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்னர்.


டில்லியின் ராணி ஜான்சி சாலை, அனாஜ் மார்க்கெட் பகுதியில் தொழிற்சாலை ஒன்று உள்ளது. இங்கு, அதிகாலை 5.22 மணியளவில் தீவிபத்து ஏற்பட்டது. தீவிபத்திற்கான காரணம் தெரியவில்லை. இந்த சம்பவத்தில் 43 பேர் உயிரிழந்தனர். 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பலர் பத்திரமாக மீட்கப்பட்டனர். 30 வாகனங்களில் சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் நடந்து வருகிறது.


இது தொடர்பாக போலீசார் கூறுகையில், காலை நேரத்தில் தீவிபத்து ஏற்பட்டதாக தகவல் வந்தது. அந்த கட்டடத்தில் எத்தனை பேர் சிக்கியுள்ளனர் என்பது தெரியவில்லை. இதனால், மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டதாக தெரிவித்தனர்.

தீவிபத்தில் படுகாயமடைந்து, டில்லியில் உள்ள எல்என்ஜேபி மருத்துவமனையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மற்ற சிலர் காயங்களுடன், ஆர்எம்எல் மருத்துவமனை மற்றும் ஹிந்து ராவ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தீவிபத்தில் மீட்கப்பட்டவர்கள் புகையை சுவாசித்ததால், பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர். தீ முற்றிலும் அணைக்கப்பட்டு விட்டதாகவும் தெரிவித்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (21)

  • Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ

    இது மட்டும் தமிழ் நாட்டில் நடந்திருந்தால்....சுடலை கேவலமான அரசியல் செஞ்சிருக்கும்...

  • வெற்றிக்கொடி கட்டு - TAMIL NADU,இந்தியா

    மோடி ஷா இருக்கிற இடம் எல்லாம் புகையுது

  • Saravanan Kumar - nellai ,இந்தியா

    எங்கே போனார் பிண அரசியல்வாதி சுடாலின் இது தமிழகத்தில் நடக்கவில்லையே என்று ரொம்ப வறுத்த பட்டிருப்பார் பாவம்

  • a natanasabapathy - vadalur,இந்தியா

    Rail vibathu yerpattaal Railway manthiriyaiyum bus vibathu yerpattaal pokkuvarathu thurai manthiriyaiyum kaithu seyveerkalaa

  • Charles - Burnaby,கனடா

    தொழிற்சாலை இன்ஸ்பெக்ஷன் செய்ய தவறினால் அந்த ஆஃபீசர்களையும் உள்ளே வைக்க வேண்டும் . கனடாவில் வருஷத்திற்கு ஒருமுறை வீடுகளிலேயே இன்ஸ்பெக்ஷன் உண்டு. யாரும் தப்ப முடியாது

Advertisement