Advertisement

சென்னை போட்டோ வாக் புகைப்பட கண்காட்சி


சென்னை போட்டோ வாக் குழுவினரால் வருகின்ற 13,14,15---- ஆகிய தேதிகளில் புகைப்பட கண்காட்சி நடைபெற உள்ளது.
ஐ ஆப் மெட்ராஸ் என்ற தலைப்பில் சென்னை நுங்கம்பாக்கம் ஆர்ட் ஹவுசில் நடைபெறும் இந்த கண்காட்சியில் 104 புகைப்படக்கலைஞர்களின் 201 புகைப்படங்கள் இடம்பெறும்.
சென்னை போட்டோ வாக் குழுவானது 12 வருடம் பழமையானது.16 ஆயிரத்து 700 பேர்களை உறுப்பினர்களாகக் கொண்டது.மாதத்தின் முதல் மற்றும் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை சென்னை மற்றும் சென்னையைச் சுற்றியுள்ள இடங்களுக்கு புகைப்படம் எடுக்கச் செல்வது வழக்கம்.இதில் யார் வேண்டுமானாலும் உறுப்பினராகலாம் ஒவ்வொரு போட்டோ வாக்கின் போதும் 30ல் இருந்து 100 பேர்வரை இடம் பெறுவர்.தாங்கள் எடுத்த படங்களை சமூக வலைதளங்களில் பகிர்வர்.
கடந்த மூன்று வருடங்களாக உறுப்பினர்கள் எடுத்த படங்களைக் கொண்டு புகைப்படக் கண்காட்சி நடத்திவருகின்றனர், மூன்றவாது ஆண்டாக இந்த வருடம் நடைபெறும் கண்காட்சியில் எட்டு தலைப்புகளில் இடம் பெறும் புகைப்படங்களை பார்த்து ரசிக்க அனைவரும் வரலாம். இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு ராமசாமி நல்லபெருமாள் 9444062684,ஹரிகர சுப்பிரமணியன் 9445416821 ஆகியோரை தொடர்பு கொள்ளவும்.
-எல்.முருகராஜ்murugarajdinamalar.in

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement