Advertisement

துவக்கம்! சென்னை சாலைகள் சீரமைப்பு பணி....காற்று மாசுபடுவதை தடுக்க நெடுஞ்சாலைதுறை தீவிரம்

Share
சென்னை:சென்னையில், காற்று மாசு ஏற்படுவதை தடுக்க, மழையால் சேதமடைந்த சாலைகளை உடனுக்குடன் சீரமைக்கும் பணியை, நெடுஞ்சாலைத் துறை துவங்கியுள்ளது.
சென்னையில், அண்ணா சாலை, பூந்த மல்லி நெடுஞ்சாலை, ஜி.எஸ்.டி., சாலை, ஜி.என்.டி., சாலை, உள்வட்டச் சாலை உள்ளிட்ட, 200 கி.மீ., சாலைகளை, மாநில நெடுஞ்சாலைத் துறையினர் பராமரித்து வருகின்றனர்.
பராமரிப்பு நிதி
இவற்றில் பல சாலைகள், மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக சேதமடைந்திருந்தன. இச்சாலைகளில், காற்று மாசு அதிகரித்ததால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். சமீபத்திய மழையால், இந்த சாலைகளில், கூடுதல் பள்ளங்கள் ஏற்பட்டன. இது, வாகன போக்குவரத்தை கடுமையாக பாதித்தது. இந்நிலையில், சென்னையில் மழையால் சேதமடைந்த சாலைகளை, விரைந்து சீரமைக்க, முதல்வர், இ.பி.எஸ்., உத்தரவிட்டிருந்தார்.

பராமரிப்பு நிதியில், இந்த பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. வழக்கமாக, மழைக்காலம் முடியும் வரை, கட்டட இடிபாடுகளை பயன்படுத்தி, சாலைகளை தற்காலிகமாக சீரமைப்பது நெடுஞ்சாலைத் துறையின் வழக்கம். தற்போது, தார் கலவையை பயன்படுத்தி, சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சீரமைக்கும் பணிகளை, நெடுஞ்சாலைத் துறையினர் துவங்கியுள்ளனர்.
வரவேற்பு
இதனால், காற்று மாசு தடுக்கப்படும். உள்வட்டச் சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, அண்ணா சாலை, ஜி.எஸ்.டி., சாலை உள்ளிட்டவற்றில், இப்பணிகள் இரவு நேரங்களில் நடக்கின்றன. சாலை சீரமைப்பு பணிக்கு, 'மினி ரோலர்' இயந்திரங்களை, நெடுஞ்சாலைத் துறையினர் பயன்படுத்துவதால், இரவு நேரங்களில் போக்குவரத்து தடையும் செய்யப்படாமல் பணிகள் செய்யப்படுகின்றன. இது, வாகன ஓட்டிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement