Advertisement

பாபர் மசூதி இடிப்பு தினம்: அமைதி காக்க தலைவர்கள் முடிவு

Share

இந்த செய்தியை கேட்க

Your browser doesn’t support HTML5 audio

மும்பை:பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி அதை ஆதரித்தும் எதிர்த்தும் நடைபெறும் நிகழ்ச்சிகளை தவிர்க்க இந்து முஸ்லிம் தலைவர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


அயோத்தி வழக்கில் 'சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டலாம்' என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததை தொடர்ந்து 'வெற்றிக் கொண்டாட்டங்கள் கூடாது' என ஹிந்து அமைப்புகள் தெரிவித்திருந்தன.இந்நிலையில் பாபர் மசூதி இடிப்பு தினமான இன்று வழக்கமாக கொண்டாடப்படும் 'வெற்றி நாள்' நிகழ்ச்சியை கைவிட விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு முடிவெடுத்துள்ளது.


இது குறித்து இந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர் சரத் சர்மா கூறியதாவது: 'அயோத்தி தீர்ப்பு வாயிலாக உண்மை வென்றுள்ளதால் இனி கொண்டாட்டம் எதுவும் தேவையில்லை' என மடாதிபதிகள் தெரிவித்துள்ளனர். அதனால் அயோத்தியில் எந்த பொது நிகழ்ச்சியும் நடைபெறாது. மக்கள் கோவில்களில் விளக்கேற்றி வழிபடலாம். இவ்வாறு அவர் கூறினார்.

அகில இந்திய முஸ்லிம் தனி நபர் சட்ட வாரியம் 'பாபர் மசூதி இடிப்பு தினம் வழக்கம் போல அமைதி யான முறையில் துக்க நாளாக கடைபிடிக்கப்படும்; அதில் பங்கேற்பது தனி நபர் விருப்பத்தை பொறுத்தது' என கூறியுள்ளது. ராமஜென்மபூமிக்கு அருகே உள்ள 'தெரி பஜார்' மசூதி நிர்வாகம் 'வழக்கம் போல தொழுகை நடைபெறும்' என தெரிவித்துள்ளது.

இதற்கிடையே அயோத்தியில் பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு அசம்பாவிதங்களை தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 'சமூக ஊடகங்களில் வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்' என பொதுமக்களை போலீஸ் கேட்டுக் கொண்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (11)

 • Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா

  அருமை .அனைவரும் நாட்டின் ஒற்றுமைக்கு துணை நிற்போம் கேவலமான அரசியல் வாதிகளின் நடிப்பை புறக்கணிப்போம்

 • Selvaraj Thiroomal - Chennai,இந்தியா

  போலி பக்தர்களுக்கு ஒரு யோசனை. நீங்களும் இந்த நாளை ராமர் கோயில் கால்கோள் நாளென்று கொண்டாடலாம். கோர்ட் தீர்ப்பே அப்படிதான் உள்ளது.( உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்....)

 • சீனு, கூடுவாஞ்சேரி - ,

  இதெல்லாம் தமிழகத்தில் மட்டுமே. இந்த தீயசக்திகளை ஒழித்து விட்டால் எல்லாம் சரியாகவிடும். கட்டுமரமே மூழ்கியபோது எதுவும் சாத்தியம்.

 • வெண்பச்சை வேந்தன் - திராவிட பட்டி,சுவீடன்

  ஹிந்து தனி நபர் சட்ட வாரியம் அமைக்கலாம் என்று இருக்கிரேன்..

 • அருணா -

  நல்ல தீர்ப்பிற்கு பின் ஆறு மறக்க வேண்டும்.. வரலாற்று குறிப்பில் இருந்து நீக்கப் பட வேண்டும். வந்தேமாதரம்

Advertisement