Advertisement

தருமபுரம் ஆதினத்திற்கு வணிகர்கள் அஞ்சலி

மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனம் 26ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சீர்காழியில் 1500 கடைகள் அடைக்கப்பட்டன.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் 26ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் உடல்நலக் குறைவு காரணமாக தஞ்சை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று (டிச.,04) மதியம் சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார். அதனை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சீர்காழி முழுவதும் 1500 கடைகளை அடைத்து வணிகர்கள் அஞ்சலி செலுத்தினர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement