Advertisement

ஹெலிகாப்டர் ஊழல் வழக்கு : ரதுல் பூரிக்கு ஜாமின்

புதுடில்லி:ஐரோப்பிய நாடான இத்தாலியை சேர்ந்த, அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து, வி.வி.ஐ.பி.,க்கள் பயணம் செய்ய, ஹெலிகாப்டர்கள் வாங்க போடப்பட்ட ஒப்பந்தத்தில் ஊழல் நடந்தததாக, குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில், காங்., மூத்த தலைவரும், மத்திய பிரதேச முதல்வருமான கமல்நாத்தின் மருமகன் ரதுல் பூரியை, அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இந்த வழக்கில், ரதுல் பூரிக்கு, டில்லி நீதிமன்றம், நேற்று ஜாமின் வழங்கியது. வங்கி மோசடி வழக்கிலும் அவர் கைது செய்யப்பட்டு இருப்பதால், அவர் சிறையில் இருந்து வெளிவர முடியாத நிலை தொடர்கிறது.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Gopal - Jakarta,இந்தோனேசியா

    வெளியே விட்டுடாதீங்கப்பா.

Advertisement