Advertisement

பெண் டாக்டர் கொலை: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

ஐதராபாத்: தெலுங்கானாவில், தலைநகர் ஐதராபாத் அருகே, புறநகர் பகுதியான ஷாம்ஷதாபாதில், 27 வயது கால்நடை பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டு எரித்துக்கொல்லப்பட்டார்.இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக, டிரக் டிரைவர்கள், கிளீனர்கள் என, நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.'இந்த கொடூரத்தைச் செய்த குற்றவாளிகளை விசாரணையில்லாமல் துாக்கிலிட வேண்டும்' என பார்லி.யில்பெண் எம்.பி.க் கள் ஆவேச குரல் எழுப்பினர்.
நாடு முழுவதும் பலர் கொந்தளிப்புடன் உள்ள நிலையில் தேசிய மனித உரிமை ஆணையம் மத்திய , மாநில அரசு காவல்துறை தலைவர்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசு உயரதிகாரிகள் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் பெண்களுக்கெதிரான குற்றங்களை தடுக்க கடுமையான சட்டங்கள் இருந்தும் குற்றங்கள் அதிகரிப்பது குறித்து மத்திய, மாநில காவல்துறை அதிகாரிகள் 6 வாரங்களுக்குள் தனது அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (15)

  • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

    //கடுமையான சட்டங்கள் இருந்தும் குற்றங்கள் அதிகரிப்பது குறித்து மத்திய, மாநில காவல்துறை அதிகாரிகள் 6 வாரங்களுக்குள் தனது அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்// கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு , சிறுவயதிலேயே நாடு என்றால் என்ன, குடிமக்களின் உரிமை, சிவில் மற்றும் குற்றவியல் சட்டங்களை சொல்லிக்கொடுக்க வேண்டும். சக மனிதர்களை மதிப்பது, ஒழுக்கம், வாழ்வியல் முறை ஆகியவற்றை சொல்லிக்கொடுக்க வேண்டும். இது முதல் 8 ஆண்டுகள் படிப்பிலே சொல்லிக்கொடுக்கப்பட வேண்டும்.

  • ezhumalaiyaan - Chennai,இந்தியா

    அறிக்கை தாக்கல் செய்ய ஆறு வார கால் அவகாசம் எதற்கு?. அரசியல் சமாச்சாரம் என்றால் அர்த்த ராத்திரில அமர்ந்து, மறுநாள் 10 மணிக்குள் முடிவெடுக்க வேண்டும் என்னும்போது சமூக பிரச்சினைகளுக்கு ஏன் இதை மெத்தனம்?

  • ezhumalaiyaan - Chennai,இந்தியா

    arikkai

  • vbs manian - hyderabad,இந்தியா

    பெண்கள் தங்கள் வசம் பெப்பர் ஸ்பிரே மிளகாய் பொடி சின்ன ஆசிட் பாட்டில் வைத்திருக்க வேண்டும் போலீஸ் அனுமதி கொடுத்தால் சின்ன கை துப்பாக்கி சமயத்தில் உதவும்.

  • Swamy - pondicherry,இந்தியா

    மனித உரிமை ஆணையமே... நீங்கள் முதலில் மூடிக்கொண்டு இருந்தாலே போதும், உங்களின் தலையீடு இனி குற்றவாளிக்கு சாதகமே.

Advertisement