Advertisement

50 சதவீத ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்தது

சென்னை : பரவலாக பெய்து வரும் மழையால், போரூர் ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. தற்போது அதன் கொள்ளளவில் பாதி நிரம்பியுள்ளது.

சென்னைக்கு மிக அருகாமையில், மாநகராட்சி எல்லையில் போரூர் ஏரி உள்ளது. 2015ம் ஆண்டு, போரூர் ஏரியை துார் வாரி, 46 மில்லியன் கன அடி கொள்ளளவில் இருந்து, 70 மில்லியன் கன அடி நீரை சேமிக்கும் வகையில் ஆழப்படுத்தப்பட்டது.மேலும், 2017ம் ஆண்டு, இந்த ஏரிக்கரையில், 1.85 கோடி ரூபாய் செலவில், தற்காலிக குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது.இந்த சுத்திகரிப்பு நிலையம் மூலம், தினமும், 40 லட்சம் லிட்டர் நீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு, சென்னையின் குடிநீர் தேவைக்கு பயன்படுத்தப்பட்டது.

ஆனால், இவ்வாண்டின் துவக்கத்தில் மழை பெய்யாததாலும், கோடை வெயில் தாக்கத்தாலும், ஏரி முழுமையாக வறண்டது. தற்போது, பெய்து வரும் மழையால், போரூர் ஏரியின் நீர்மட்டம் மீண்டும் உயர துவங்கி உள்ளது.ஏரியின் கொள்ளளவான, 70 மில்லியன் கன அடியில், 35 மில்லியன் கன அடி தண்ணீர் நிரம்பி உள்ளதாவும், தொடர்ந்து மழை பெய்தால், ஏரி முழு கொள்ளளவை எட்டும் எனவும், பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement