Advertisement

அதிகாரிகளுக்கு இரவு பணி

ஆவடி : கன மழை தொடர்ந்து பெய்து வருவதால், ஆவடி மாநகராட்சி அதிகாரிகள், மூன்று குழுவாக பிரிந்து இரவு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆவடி தாலுகா பகுதிகளில், நேற்று முன்தினம் காலை, 6:00 மணி நிலவரப்படி, 4.4 செ.மீ. மழை பதிவானது. தொடர்ந்து கன மழை பெய்து வருவதால், ஆவடி சுற்றுவட்டார ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன.இதனால், வெள்ள தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகளில், ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

மாநகராட்சி தலைமை பொறியாளர் உட்பட, 25 பேர், நேற்று முன்தினம் இரவு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து, 24 மணி நேரமும் தொடர் கண்காணிப்பில் இருக்க, உதவி பொறியாளர்கள் உள்ளிட்டோர் அடங்கிய மூன்று குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement