Advertisement

குறட்டை போலீசாரால் தப்பிய கொள்ளையன்!

Share
''கொடுத்த பணத்தை திருப்பி தர்றதுதானேங்க மரியாதை...'' என, மொபைல் போனை, பாக்கெட்டில் போட்டபடியே வந்தார், அந்தோணிசாமி.

''பணத்தை தராம, அல்வா குடுக்க பார்க்கிறது யாரு வே...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.

''உள்ளாட்சி தேர்தலுக்காக, அ.தி.மு.க., - தி.மு.க., மாதிரியே, தே.மு.தி.க.,வுலயும், விருப்ப மனு வாங்கினாங்களே... இதுக்கு கட்டணமும் வசூல் செஞ்சாங்க... ''நேரடி மேயர் தேர்தல் ரத்தாகிட்டதால, மேயர், நகராட்சித் தலைவர் பதவிகளுக்கு பணம் கட்டியவங்களுக்கு, தி.மு.க., - அ.தி.மு.க.,வுல பணத்தை திருப்பிக் குடுத்துட்டாங்க...

''அதே மாதிரி, தே.மு.தி.க.,வுலயும் தருவாங்கன்னு, அந்தக் கட்சிக்காரங்க எதிர்பார்த்தாங்க... ஆனா, அதுக்கான எந்த அறிகுறியையும் காணலைங்க... அந்த பணத்தை திருப்பி குடுக்கிறதா அல்லது உள்ளாட்சித் தேர்தல் செலவுக்கு வச்சுக்கிறதான்னு, பொருளாளர் பிரேமலதா யோசிச்சிட்டு இருக்காங்க...'' என்றார் அந்தோணிசாமி.

''என்னால தான், என்னால தான்னு தம்பட்டம் அடிச்சிட்டு இருக்காவ வே...'' என, அடுத்த தகவலுக்கு சென்றார், அண்ணாச்சி.

''என்ன விஷயம் பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.

''மதுரை மாநகராட்சி விரிவாக்கப் பகுதிகள்ல இருக்கிற, கண்மாய்களுக்கு, பெரியாறு, வைகை தண்ணீரை கொண்டு போறாங்க... மதுரை கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட கண்மாய்களுக்கு, அந்த தொகுதியின், தி.மு.க., - எம்.எல்.ஏ., மூர்த்தி, பொதுப்பணித் துறை, மாவட்ட நிர்வாகத்திடம் பேசி, தண்ணீர் திறக்கச் சொன்னாரு வே...

''இதுக்காக, மூர்த்திக்கு நன்றி சொல்லி, குடியிருப்போர் நலச்சங்கங்கள் சார்புல, போஸ்டர்கள் ஒட்டியிருக்காவ... இதுக்கு போட்டியா, கிழக்கு மாவட்ட, அ.தி.மு.க., செயலரும், வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.,வுமான ராஜன் செல்லப்பா தரப்பு, 'முதல்வர், துணை முதல்வர் முயற்சியால, கண்மாய்களுக்கு தண்ணீர் கிடைச்சது'ன்னு, போஸ்டர்களை ஒட்டிட்டு இருக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.

''கொள்ளையனை தப்ப விட்டவாளை, கண்டுக்கவே இல்லை ஓய்...'' என, கடைசி மேட்டருக்கு சென்றார் குப்பண்ணா.

''எந்த ஊருல வே...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.

''திருச்சி, மணப்பாறை பகுதியில, பொதுமக்களின் கவனத்தை திசை திருப்பி, பணம் கொள்ளை அடிச்ச அஞ்சு பேர் கும்பலை, போலீசார் சுத்திவளைச்சு பிடிச்சாளோல்லியோ... ''இவாளை, மணப்பாறை போலீஸ் ஸ்டேஷன்ல வச்சு விசாரிச்சா... மறுநாள் அதிகாலையே, கொள்ளையர்கள்ல ஒருத்தரான, மும்பையைச் சேர்ந்த கோடீஸ் தப்பிச்சு ஓடிட்டார் ஓய்...

''அவாளை பாதுகாக்கற பொறுப்புல, ரெண்டு, எஸ்.ஐ.,க்களும், ஒரு ஏட்டும் இருந்திருக்கா... இவாள்லாம் ராத்திரி சுகமா துாங்கிட்டதால தான், கொள்ளையன் தப்பிச்சுட்டதா சொல்றா ஓய்... ''வழக்கமா, இப்படிப்பட்ட போலீசாரை, 'சஸ்பெண்ட்' பண்ணிடுவா... ஆனா, இந்த மூணு பேருக்குமே, அரசியல் செல்வாக்கு இருக்கறதால, அவாளை கண்டுக்காம விட்டுட்டான்னு, மத்த போலீசார் எல்லாம் புலம்பிண்டு இருக்கா ஓய்...'' என, முடித்தார் குப்பண்ணா.

டீயை குடித்து முடித்த அன்வர்பாய், ''சங்கர் வீட்டு வரைக்கும் போகணும்... வினோத்குமாரும், முருகேசனும் வந்தா, அங்க வரச் சொல்லிடுங்க பா...'' என, நாயரிடம் கூறியபடி கிளம்ப, மற்றவர்களும் எழுந்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • மூல பத்திரம் - ரோம், ,இத்தாலி

    சங்கர், வினோத் குமார் மற்றும் முருகேசன் இதில் சங்கர் SI என்று நினைக்கிறேன் சரியா

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    லாக்கப் கதவுகளைத் திறந்து வைத்துவிட்டு எல்லாரும் ‘தூங்கவேண்டுமென’. ஆணை வந்திருக்கும் அதற்காகத் தனி அலவன்ஸ் ஏதாவது கிடைத்திருக்கும்

  • Cheran Perumal - Radhapuram,இந்தியா

    போலீசாரும் நீதித்துறையும் தப்ப விட்ட சிறு குற்றவாளிகள்தான் பின்னர் பெரிய அளவில் கொலை கொள்ளைக்காரர்களாக உருப்பெறுகின்றனர்.

Advertisement